×

தமிழக அரசு பேனர் வைக்க தடையில்லை! மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

தமிழகத்தில் பேனர் வைக்கும் கலாசாரம் அதிகரித்து, சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்த நிலையில், தமிழகம் முழுவதுமே பேனர்களை வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதையடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பேனர் வைக்க தடை இருந்து வந்தது. தமிழகத்தில் பேனர் வைக்கும் கலாசாரம் அதிகரித்து, சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்த நிலையில், தமிழகம் முழுவதுமே பேனர்களை வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதையடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள்
 

தமிழகத்தில் பேனர் வைக்கும் கலாசாரம் அதிகரித்து, சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்த நிலையில், தமிழகம் முழுவதுமே பேனர்களை வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதையடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பேனர் வைக்க தடை இருந்து வந்தது.

தமிழகத்தில் பேனர் வைக்கும் கலாசாரம் அதிகரித்து, சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்த நிலையில், தமிழகம் முழுவதுமே பேனர்களை வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதையடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பேனர் வைக்க தடை இருந்து வந்தது. இந்த நிலையிலும், சென்ற மாதம் சீன அதிபரும், இந்திய பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்ட நிகழ்வுக்கும், சீன அதிபரை வரவேற்றும் குறிப்பிட்ட சில இடங்களில் அரசு சார்பில் பேனர்களை வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. 

தமிழகத்தில் பேனர் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு நிகழ்ச்சிக்கு பேனர் வைக்க அனுமதியளித்ததை எதிர்த்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், இனி அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பேனர்களை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகத்திற்கு வருகை தந்து, சென்று விட்டார். இந்த நேரத்தில் இந்த வழக்கை விசாரிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அரசு நிகழ்ச்சிகளில் பேனர்களை வைப்பது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.