×

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை உலக நாடுகளே பின்பற்றி வருகின்றன- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைதான் தற்போது அனைத்து உலக நாடுகளும் பின்பற்றி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதுவரை 58 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்து ட்ரையல் செய்யப்பட்டுள்ளது, இதுவரை அவர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை, மொத்தம் இந்த பரிசோதனை மேற்கொள்ள 160 பேர் தேவைப்படுகின்றனர், கோவிஷுல்டு பரிசோதனைக்கு உட்படுத்த 18 வயதிற்கு மேலுள்ள திடகாத்திரமான தன்னார்வலர்கள்
 

தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைதான் தற்போது அனைத்து உலக நாடுகளும் பின்பற்றி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதுவரை 58 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்து ட்ரையல் செய்யப்பட்டுள்ளது, இதுவரை அவர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை, மொத்தம் இந்த பரிசோதனை மேற்கொள்ள 160 பேர் தேவைப்படுகின்றனர், கோவிஷுல்டு பரிசோதனைக்கு உட்படுத்த 18 வயதிற்கு மேலுள்ள திடகாத்திரமான தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள், வளரும் தலைமுறையினரை காக்க தன்னார்வலர்கள் முன்வந்து கோவிஷீல்டு செய்து கொள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 1.6 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பாசிட்டிவ் சதவீதம் மற்றும் இறப்பு சதவீதத்தை குறைப்பதே அரசின் முக்கிய நோக்கம், இதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். பண்டிகை காலங்களில் நோய்த் தொற்று ஏற்படாமல் தவிர்க்க அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கொரோனோ விதிமுறைகளை பின்பற்றி அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனக் கூறினார்.