×

தனிமைப்படுத்த இடமில்லை… இடமிருந்தா கொடுங்க! உதவி கேட்கும் சென்னை மாநகராட்சி!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் சுமார் 650 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதேபோல் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருதையடுத்து இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோரமிருக்கும் ஆதரவற்றோர்கள் தங்க இடம், உணவு இல்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர்
 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் சுமார் 650 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதேபோல் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருதையடுத்து இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோரமிருக்கும் ஆதரவற்றோர்கள் தங்க இடம், உணவு இல்லாமல் தவிக்கின்றனர். 

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிமைப்படுத்த இடங்கள் அதிகம் தேவை என்பதால் பயன்படுத்தாத வீடுகள், விடுதிகள் இருந்தால் மாநகராட்சிக்கு தற்காலிகமாக கொடுத்து உதவலாம். இந்த அவசரமான காலகட்டத்தில் இந்த உதவியைச் செய்தால் பேருதவியாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.