×

தந்தை தேர்தலில் வெற்றி…துள்ளி குதித்த இளைஞர் சுருண்டு விழுந்து இறந்த பரிதாபம்!

கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் அங்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என கார்த்தி நண்பர்களுடன் வெற்றியைக் கொண்டாடியுள்ளார். திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உகாயனூர் ஊராட்சியில் 5-வது வார்டு வேட்பாளராக பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் போட்டியிட்டார். அந்த ஊராட்சியில் பதிவான வாக்குகள், ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டன. இந்நிலையில் சுப்ரமணியத்தின் மகன் கார்த்தி தனது நண்பர்களுடன் அங்கு வந்து அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது 5-வது வார்டு ஓட்டு எண்ணிக்கை விவரங்கள்
 

கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் அங்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என   கார்த்தி நண்பர்களுடன் வெற்றியைக் கொண்டாடியுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உகாயனூர் ஊராட்சியில் 5-வது வார்டு வேட்பாளராக பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் போட்டியிட்டார். அந்த ஊராட்சியில் பதிவான வாக்குகள்,   ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டன. 

இந்நிலையில் சுப்ரமணியத்தின் மகன் கார்த்தி தனது நண்பர்களுடன் அங்கு வந்து அமர்ந்து கொண்டிருந்தார்.  அப்போது  5-வது வார்டு ஓட்டு எண்ணிக்கை விவரங்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்துள்ளது. இறுதியில் முடிவில் வேட்பாளர் சுப்ரமணியம் மொத்தம் 240 ஓட்டுகள் பெற்று, அவரை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 18 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையறிந்த  மகன் கார்த்தி மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்க, தனது தாய்க்கு போன் செய்து கூறியுள்ளார். அவரது ஆதரவு பெற்றவரே ஊராட்சி தலைவராகி உள்ளார் என்ற செய்தி அவர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் அங்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என   கார்த்தி நண்பர்களுடன் வெற்றியைக் கொண்டாடியுள்ளார். 

ஆனால் எதிர்பாராத விதமாக  நடனமாடிக் கொண்டிருந்த கார்த்தி,  திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால்  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனால் கார்த்தியின் பெற்றோரும், நண்பர்களும் கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.