×

தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு தமிழில் நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி !

இக்கோவிலில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவில் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குடமுழுக்கைத் தமிழில் மட்டுமே நடத்த வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இன்று அந்த
 

இக்கோவிலில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவில் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குடமுழுக்கைத் தமிழில் மட்டுமே நடத்த வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இன்று அந்த வழக்கு  நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. 

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிராமண பாத்திரத்தில், தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் இரண்டு முறைப்படியும் குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோவில் சம்பிரதாயங்களில் அரசியலமைப்பு விதிகள் மீறப்பட்டால் அந்த வழக்கை நீதிமன்றம் தலையிட்டு விசாரிக்கும். இந்த வழக்கில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னர் நடத்தப்பட்ட முறையிலேயே நடக்கப்பட உள்ளதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், பிரமாண பத்திரத்தில் உள்ளது போலவே குடமுழுக்கு நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.