×

தங்கத்தை தவிடு பொடியாக்கிய ஓ.பிஎஸ்… தேனியில் ரவீந்திர நாத் சர்கார் ஆரம்பம்..!

அப்பா தமிழக அரசியலை பார்த்துக் கொள்வார். நான் மாவட்ட அரசியலையும், டெல்லியையும் பார்த்து கொள்வேன்’ என விஜய் ஸ்டைலில் கழுத்தை ஆட்டிப் பேசி வருவதாக அவரது தொண்டரடிப்பொடிகள் சொல்லி குதுகலிக்கின்றனர். தங்க தமிழ்செல்வன் – எடப்பாடியார் போட்ட திட்டத்தை தவிடுபொடியாக்கி விட்டார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவருக்கு தங்கத்துக்கு எதிராக எடப்பாடியாரிடம் குத்தம் சொல்லத்தெரியாதவரா ஓ.பி.எஸ்? தங்க தமிழ்செல்வனை கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என கறார் காட்டிய ஓ.பி.எஸின் கட்டளைக்கு பணிந்து விட்டார் எடப்பாடி. இதனால்
 

அப்பா தமிழக அரசியலை பார்த்துக் கொள்வார். நான் மாவட்ட அரசியலையும், டெல்லியையும் பார்த்து கொள்வேன்’ என விஜய் ஸ்டைலில் கழுத்தை ஆட்டிப் பேசி வருவதாக அவரது தொண்டரடிப்பொடிகள் சொல்லி குதுகலிக்கின்றனர்.

தங்க தமிழ்செல்வன் – எடப்பாடியார் போட்ட திட்டத்தை தவிடுபொடியாக்கி விட்டார் ஓ.பன்னீர்செல்வம்.  சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவருக்கு தங்கத்துக்கு எதிராக எடப்பாடியாரிடம் குத்தம் சொல்லத்தெரியாதவரா ஓ.பி.எஸ்?

தங்க தமிழ்செல்வனை கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என கறார் காட்டிய ஓ.பி.எஸின் கட்டளைக்கு பணிந்து விட்டார் எடப்பாடி. இதனால் தங்க தமிழ்செல்வன் திமுகவுக்கு கூடாரத்தை மாற்றி விட்டார். இதனால் ஓபிஎஸின் மகன் ‘ஒற்றை ரவீந்திரநாத்’ ஏக உற்சாகத்தில் இருக்கிறாராம்.  இனி சென்னைக்கு அப்பா… தேனி மாவட்டத்துக்கும் டெல்லிக்கும் நான்தான்.

 இனி யாரும் எனக்கு தேனியில் போட்டி இல்லை. கட்சியில் தேனி மாவட்டத்தில் யாரும் என்னை எதிர்க்க முடியாது. எதிர்த்தவர்கள் கட்சியில் இருக்க முடியாது. இருந்த ஒரே போட்டியும் இப்போது இல்லை. அதனால் நான் சொல்வதை மட்டுமே இங்குள்ளவர்கள் கேட்டாக வேண்டும்.  அப்பா தமிழக அரசியலை பார்த்துக் கொள்வார். நான் மாவட்ட அரசியலையும், டெல்லியையும் பார்த்து கொள்வேன்’ என விஜய் ஸ்டைலில் கழுத்தை ஆட்டிப் பேசி வருவதாக அவரது தொண்டரடிப்பொடிகள் சொல்லி குதுகலிக்கின்றனர்.