×

தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம்

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சிகள் பகுதிகளுக்கும் மாநகராட்சி வட்டம் உள்ளிட்டவைகளுக்கும் தலா ஒருவர் வீதம் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு ஆள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மாவட்ட அளவில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பட்டியலை சமர்ப்பிக்கும்படி தெரிவித்துள்ளனர்.
 

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சிகள் பகுதிகளுக்கும் மாநகராட்சி வட்டம் உள்ளிட்டவைகளுக்கும் தலா ஒருவர் வீதம் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு ஆள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மாவட்ட அளவில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பட்டியலை சமர்ப்பிக்கும்படி தெரிவித்துள்ளனர்.