×

டிராஃபிக் போலீஸ் இந்த நேரத்தில் போன் பேசத்தடை : போக்குவரத்து துறையின் அதிரடி உத்தரவு!

சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த தமிழக போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. மக்கள் தொகை அதிகரிக்க வாகன புழக்கமும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு வீட்டுக்குக் குறைந்தது இரண்டு இருசக்கர வாகனமாவது இருக்கிறது. அதிகரித்து வரும் இந்த வாகனங்கள் சாலை விபத்துக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. என்ன தான் சாலை விதிமுறைகள் இருந்தாலும், அனைவரும் அதனைப் பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக் குறி தான். இவ்வாறு நடக்கும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த தமிழக போக்குவரத்துத்
 

சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த தமிழக போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது.

மக்கள் தொகை அதிகரிக்க வாகன புழக்கமும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு வீட்டுக்குக் குறைந்தது இரண்டு இருசக்கர வாகனமாவது இருக்கிறது. அதிகரித்து வரும் இந்த வாகனங்கள் சாலை விபத்துக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. என்ன தான் சாலை விதிமுறைகள் இருந்தாலும், அனைவரும் அதனைப் பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக் குறி தான். இவ்வாறு நடக்கும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த தமிழக போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகளுக்கு மட்டும் இல்லாமல் சாலை போக்குவரத்தைக் கண்காணிக்கும் அரசு ஊழியர்களுக்கும் தான். 

தமிழக அரசு தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 9 ஆண்டுகள் அதாவது 2011-2019 வரை 10,667 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பல பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.