×

டிராஃபிக் போலீஸிடம் தப்பிவிட்டோம் என்று நினைக்காதீங்க: வீட்டுக்கே தேடி வருகிறது வில்லங்கம்!

சென்னை போக்குவரத்துத் துறை, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அவரவர் வீட்டிற்கே கட்டண இரசீது அனுப்பி வருகிறது சென்னை : சென்னை போக்குவரத்துத் துறை, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அவரவர் வீட்டிற்கே கட்டண இரசீது அனுப்பி வருகிறது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்குவது இல்லை என்று காவல்துறையைச் சென்னை உயர்நீதிமன்றம் கடிந்து கொண்டது. இதனால் போலீசார் ஹெல்மெட் அணியாதவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் வசிக்கும் மணிகண்டன்
 

சென்னை போக்குவரத்துத் துறை, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அவரவர் வீட்டிற்கே கட்டண இரசீது அனுப்பி வருகிறது 

சென்னை : சென்னை போக்குவரத்துத் துறை, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அவரவர் வீட்டிற்கே கட்டண இரசீது அனுப்பி வருகிறது.

 

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்குவது இல்லை என்று காவல்துறையைச் சென்னை உயர்நீதிமன்றம் கடிந்து கொண்டது. இதனால் போலீசார் ஹெல்மெட் அணியாதவர்களை  மடக்கி பிடித்து  அபராதம் விதித்து வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் வசிக்கும் மணிகண்டன்  என்பவருக்குப் போக்குவரத்து விதிகளை மீறியதற்கான   அபராத தொகை ரசீதை காவல் துறையினர் அவரது வீட்டுக்கே அனுப்பி வைத்துள்ளனர். அதாவது விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுக்கும் வகையில் அண்ணா நகரில் நவீன கேமிரா நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்களின் முகவரியைக்  கண்டுபிடித்து, அபராத ரசீதை போக்குவரத்துத் துறை வீட்டுக்கே அனுப்பி வைக்கின்றனர். இதனால் இனிவரும் காலங்களில் வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்று நம்பப்படுகிறது.