×

டிஜிபி அலுவலகத்தில் 2 காவலருக்கு கொரோனா!

டி.ஜி.பி. அலுவலகத்தில் 2 உளவுத்துறை காவலர்கள் உட்பட மேலும் 4 காவலர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. டி.ஜி.பி. அலுவலகத்தில் 2 உளவுத்துறை காவலர்கள் உட்பட மேலும் 4 காவலர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 9000 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 2300-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 

டி.ஜி.பி. அலுவலகத்தில் 2 உளவுத்துறை காவலர்கள் உட்பட மேலும் 4 காவலர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

டி.ஜி.பி. அலுவலகத்தில் 2 உளவுத்துறை காவலர்கள் உட்பட மேலும் 4 காவலர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 9000 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 2300-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 1200 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பெண் காவலருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் உளவுத்துறை கட்டுப்பாட்டு அறை காவலர்கள் 2 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெரவள்ளூர், மற்றொருவர் மைலாப்பூர் பகுதியயை சேர்ந்தவர். இவர்களும் ஒமந்தூரார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் ஓட்டேரி  காவல் நிலைய காவலர் ஒருவர்  என இன்று ஒரே நாளில் 4 காவலருக்கு கொரோ கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.