×

ஜோதிடர் பேச்சை கேட்டு அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்ட சரவணபவன் ராஜகோபால்: கொலை முதல் கைது வரை வழக்கு கடந்து வந்த பாதை!

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததாக நேற்று வெளியான செய்தி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. சென்னை: ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததாக நேற்று வெளியான செய்தி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பிரின்ஸ் கொலை வழக்கில் பெரும் செல்வாக்குடன் வலம்வந்த ராஜகோபால் சிக்கியது எப்படி? கடந்த 2001 ஆண்டு
 

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம்  உறுதி செய்ததாக நேற்று  வெளியான செய்தி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

சென்னை: ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம்  உறுதி செய்ததாக நேற்று  வெளியான செய்தி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பிரின்ஸ் கொலை வழக்கில் பெரும் செல்வாக்குடன் வலம்வந்த ராஜகோபால் சிக்கியது எப்படி? கடந்த 2001 ஆண்டு நடந்த இந்த கொலை 18 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை என்ன? என்பதை இதில் செய்தியில் காண்போம்.

கொடிகட்டிப் பறந்த  ராஜகோபால் 

உலகம் முழுவதும் பல நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள சரவணபவன் ஓட்டல் கொடிகட்டிப் பறந்த காலம் அது. அப்போது அதன் நிறுவனர் ராஜ கோபாலுக்கு, 55 வயது. முன்னதாக ராஜகோபாலுக்கு இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், ஜோதிடர் ஒருவர், மூன்றாவது திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்த,அவர் தேர்ந்தெடுத்தது, தன்னிடம் துணை மேலாளராக பணிபுரிந்து வந்த ராமசாமியின் மகள் ஜீவஜோதியை தான். ஜீவஜோதி திருமணமானவர் என்று தெரிந்ததால், அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை  சரிக்கட்ட முயன்றார் பணம்படைத்த ராஜகோபால். 

மனைவியை திருமணம் செய்ய கணவரை தீர்த்துக்கட்டிய கும்பல் 

இதையடுத்து வேளச்சேரியில் கணவருடன் வசித்து வந்த  ஜீவஜோதியின் இல்லத்திற்குக் கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி சென்ற சென்ற ராஜகோபால் ஆட்கள்,  அவரை அண்ணாச்சி அழைக்கிறார் என்று கூறி அழைத்து சென்றனர்.அப்போது அண்ணாச்சி ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார், அதற்க்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர தயாராக இருக்கிறார் என்பதையும் கூறினர். ஆனால்  அதற்கு மறுப்பு தெரிவித்த பிரின்ஸ் சந்தகுமாரை அக்டோபர் 26 ஆம் தேதி கொடைக்கானலுக்கு கடத்தி சென்று, காரிலேயே கொலை செய்து பின் மலையடிவாரத்தில் வீசினர். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட டேனியல் உள்பட 8 பேர் தலைமறைவாகினர். 

 ஜீவஜோதியின் புகார்

2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை காணவில்லை என  ஜீவஜோதி புகார் அளித்தார். இதையடுத்து விசாரணையில் பிரின்ஸ் சாந்தகுமார் கொல்லப்பட்டது, தெரியவர கொலை வழக்கு ஒன்றும் பதியப்பட்டது. அதேசமயத்தில், பிரின்ஸ் சாந்தகுமார் வீடு சூறையாடப்பட்டது. இது தொடர்பாக ஜீவஜோதி அளித்த புகாரின் அடிப்படையில் ராஜகோபால் மீது திருட்டு வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. 

 ராஜகோபால் கைது

இந்த மூன்று வழக்குகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகோபாலின்  உதவியாளர் டேனியல்  உள்பட 8 பேரை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.  பின்பு டேனியல் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

10 ஆண்டுகால் சிறை,  55 லட்சம் ரூபாய் அபராதம் 

இவ்வழக்கு தொடர்பாக  வேளச்சேரி காவல்நிலைய ஆய்வாளர் தெய்வசிகாமணி நடத்திய விசாரணையில், மொத்தம் 123 சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பிப்ரவரி 2002ல் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து   2004 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் வழக்கை விசாரித்த, பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி செல்வகுமார், ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகால சிறை தண்டனையும் 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம் 

இதைத் தொடர்ந்து 2009 மார்ச் 19ம் தேதி மேல்முறையீட்டுக்குச் சென்ற இந்த  விசாரித்த நீதிபதிகள் மிஸ்ரா மற்றும் பானுமதி அடங்கிய அமர்வு தண்டனை காலத்தை ஆயுளாக மாற்றியது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ராஜகோபால்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் சுமார்10 ஆண்டுகள் கழித்து, ராஜகோபால் உள்பட 9 பேரின் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உறுதி செய்து  நேற்று உத்தரவிட்டுள்ளது. 

18 ஆண்டுகள்  நடந்த  வழக்கு

செசன்சு நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை ஏறக்குறைய  18 ஆண்டு காலம் இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது. பணம் படைத்தவர்கள் சட்டத்தின் முன் இருந்து தப்பிக்க முடியாது என்பதற்கு இந்த வழக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

நீதி வென்று விட்டது

கணவர் மறைவிற்குப் பிறகு தனி ஆளாக போராடி வென்றுள்ள, பிரின்ஸ் சந்தகுமாரின் மனைவி ஜீவஜோதியோ, ராஜகோபாலின்  ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்கது.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தான் இந்த வழக்கை போலீசார் தீவிரமாக புலன் விசாரணை செய்ய துவங்கினர். அதனால் ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் அவரிடம் ஆசி வாங்கியிருந்திருப்பேன். இறுதியில் நீதி வென்று விட்டது’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இதையும் வாசிக்க: திருமணமான மூன்றே மாதங்களில் நடிகை பிரியங்கா – நிக் ஜோனாஸ் விவாகரத்து?! ஷாக்கான ரசிகர்கள்!