×

ஜெயலலிதாவை மட்டுமல்ல கருணாநிதியையும் முதல்வராக்கியவர் எம்.ஜி.ஆர்!

திரைப்பட நடிகராக மக்களுக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர், அரசியலில் நுழைந்து மக்களின் அமோக ஆதரவுடன் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திரைப்பட நடிகராக மக்களுக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர், அரசியலில் நுழைந்து மக்களின் அமோக ஆதரவுடன் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று அதிமுகவினர் கொண்டாடும் எம்.ஜி.ஆர். அன்று திமுக உறுப்பினர். திமுகவில் 6 ஆண்டுகள் பொருளாளராக பணியாற்றினார். அண்ணா என் தலைவன், காமராசர் என் வழிகாட்டி என அடிக்கடி கூறிக்கொள்ளும் எம்.ஜி.ஆர். பின்னாளில் ஏற்பட்ட அதிருப்தியினால்
 

திரைப்பட நடிகராக மக்களுக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர், அரசியலில் நுழைந்து மக்களின் அமோக ஆதரவுடன் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரைப்பட நடிகராக மக்களுக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர், அரசியலில் நுழைந்து மக்களின் அமோக ஆதரவுடன் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று அதிமுகவினர் கொண்டாடும் எம்.ஜி.ஆர். அன்று திமுக உறுப்பினர். திமுகவில் 6 ஆண்டுகள் பொருளாளராக பணியாற்றினார். அண்ணா என் தலைவன், காமராசர் என் வழிகாட்டி என அடிக்கடி கூறிக்கொள்ளும் எம்.ஜி.ஆர். பின்னாளில் ஏற்பட்ட அதிருப்தியினால் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஆனால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை வளர்த்துவிட்டவரே எம்.ஜி.ஆர் என்றால் அது மிகையாகாது. 

அண்ணா மறைந்ததும் தமிழகத்தின் முதல்வர் பதவிக்கான சர்ச்சை திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிகழ்ந்தது. அண்ணா மறைவுக்கு பிறகு அமைச்சரவையில் மூத்த உறுப்பினராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வரானார். அவருக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களும், கருணாநிதிக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏகளும் இருந்தார்கள். இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. திமுகவின் சட்டமன்றக் குழுவுக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 1969 ஆண்டு பிப்ரவரி 9 ஆம் ஆண்டு சென்னை அரசினர் தோட்டத்தில் கூட்டப்படும் என்று அறிவித்தார் நெடுஞ்செழியன்.

கருணநிதியும் எம்.ஜி.ஆரும் திரைத்துறையிலும், அரசியலிலும் நண்பர்களாக இருந்தார்கள். அப்போது எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலைஞரின் பக்கமே இருந்தனர். கருணாநிதி ஆதரவாக எம்.ஜி.ஆர் செயல்பட்டதில் நெடுஞ்செழியனுக்கு பலத்த அதிருப்தி ஏற்பட்டது. 

திமுக எம்.எல்.ஏக்களையும் தமது ஆதரவாளர்களையும் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து கருணாந்திக்கு ஆதரவு தருமாறு விருது வைத்தார் எம்.ஜி.ஆர். அதன்பின் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  ஒரு முறை சட்டசபையில் கருணாநிதி என்னை முதல்வர் நாற்காலியில் அமரவைத்ததே எம்.ஜி.ஆர் தான் என உரக்க கூறினார். ஆனால் அப்போது அவரின் அந்த நன்றியை ஏற்க எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை.