×

ஜெயலலிதா எப்போது இறந்தார்? விசாரணை ஆணையத்தில் மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்

ஜெயலலிதா மரணம் அடைந்த நாள் தொடர்பான வாக்குமூலத்தை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு எய்ம்ஸ் மருத்துவர் விளக்கமாகத் தெரிவித்துள்ளார். சென்னை: ஜெயலலிதா மரணம் அடைந்த நாள் தொடர்பான வாக்குமூலத்தை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு எய்ம்ஸ் மருத்துவர் விளக்கமாகத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உருவாகியதையடுத்து, அதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு உருவாக்கியது. அதன்படி ஜெயலலிதா
 

ஜெயலலிதா மரணம் அடைந்த நாள் தொடர்பான வாக்குமூலத்தை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு எய்ம்ஸ் மருத்துவர் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஜெயலலிதா மரணம் அடைந்த நாள் தொடர்பான வாக்குமூலத்தை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு எய்ம்ஸ் மருத்துவர் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உருவாகியதையடுத்து, அதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு உருவாக்கியது.

அதன்படி ஜெயலலிதா வீட்டில் வசித்த நபர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள், அரசு தலைமை அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வகையில், இன்று ஆணையம் முன்பு ஆஜரான எய்ம்ஸ் மருத்துவர், 2016 டிசம்பர், 4ம் தேதி மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்தார் என்பது தவறு, 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார்” என தெரிவித்துள்ளார். இந்த தகவலை சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.