×

ஜெ.மரணத்தை கொண்டாடிய ‘உத்தமவில்லன்’: நமது அம்மா நாளிதழ் கடும் விமர்சனம்!

ஜெயலலிதாவின் மரணத்தை அடிமனதில் கொண்டாடியவர்தான் இந்த உத்தம வில்லன் என்று அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா, கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தை அடிமனதில் கொண்டாடியவர்தான் இந்த உத்தம வில்லன் என்று அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா, கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கமல் ஹாசன் வெளியிட்ட வீடியோ பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வீடியோ பதிவு ஒன்றை மக்கள் நீதி மய்யம்
 

ஜெயலலிதாவின் மரணத்தை அடிமனதில் கொண்டாடியவர்தான் இந்த உத்தம வில்லன் என்று அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா, கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தை அடிமனதில் கொண்டாடியவர்தான் இந்த உத்தம வில்லன் என்று அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா, கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

கமல் ஹாசன் வெளியிட்ட வீடியோ

 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வீடியோ பதிவு ஒன்றை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், ‘பெண்கள் பாதுகாப்பை உறதி செய்றேன்னு சொன்ன ஜெயலலிதா புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்திருக்கும் நீங்கள் இந்த விவகாரத்தில் பெண்களுக்கு எதிராகச் செயல்படுகிறீர்கள். கட்சியின் தலைவராக இதனை கேட்கவில்லை, இரு பெண்களின் தந்தை என்ற பெயரில் கேட்கிறேன். என்ன செய்து இந்த தவறுகளுக்குப் பரிகாரம் தேட போறீங்க. உங்க அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படி துடைக்க போறீங்க சாமி’ என அ.தி.மு.க-வினரை சரமாரியாகச் சாடியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தை கொண்டாடிய உத்தம வில்லன்

இந்நிலையில்,  அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் கமல் குறித்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘பொள்ளாச்சி விவகாரத்தில் புழுதிவாரி தூற்றுகிறாரே உளறல் நாயகன். அ.தி.மு.க அரசின் மீது வன்மம் கொண்டு, உள்நோக்கம் கற்பிக்க கமல் ஹாசன் போன்றோர் வெறிபிடித்து அலைகிறார். குற்றம் இழைத்தவர்கள் கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவதூறு பரப்புவது தேர்தல் காலத்து நரித்தனமே. ஆளும் அ.தி.மு.க அரசு மீது அவதூறு பரப்புவதற்கு இதுவே தருணம் என்று அடுக்காத குற்றச்சாட்டுகளை வீசும் தி.மு.க-வுடன், கமல்ஹாசனும் கைகோர்க்கிறார். சான்றோருக்கு இரங்கல் என ஜெயலலிதாவின் மரணத்தை அடிமனதில் கொண்டாடியவர் தான் இந்த உத்தம வில்லன்’என்று விமர்சனம் செய்துள்ளது.

முரசொலியும் கமலும் 

முன்னதாக தி.மு.க-வை அழுக்குப்பொதி என்றும், கிராமசபைக் கூட்டம் குறித்து விமர்சனம் செய்தற்கும் கமல் ஹாசனை தி.மு.க-வின் முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.