×

ஜெ. ஜெயலலிதா எனும் இரும்பு பெண்மணியின் பிறப்பு முதல் இறப்பு வரை…!

இறக்கும் வரை அதே கட்டுக்கோப்புடன் கட்சியை தனியொரு பெண்மணியாக வழிநடத்தி விட்டு சென்றுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கட்சியை தாங்கி பிடித்த பெருமை ஜெயலலிதாவைச் சேரும். அன்றிலிருந்து அவர் இறக்கும் வரை அதே கட்டுக்கோப்புடன் கட்சியை தனியொரு பெண்மணியாக வழிநடத்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ஜெ. ஜெயலலிதா என்னும் இரும்பு பெண்மணியின் பிறப்பு முதல்
 

இறக்கும் வரை அதே கட்டுக்கோப்புடன் கட்சியை தனியொரு பெண்மணியாக வழிநடத்தி விட்டு சென்றுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கட்சியை தாங்கி  பிடித்த பெருமை ஜெயலலிதாவைச் சேரும். அன்றிலிருந்து அவர் இறக்கும் வரை அதே கட்டுக்கோப்புடன் கட்சியை தனியொரு பெண்மணியாக வழிநடத்தி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜெ. ஜெயலலிதா என்னும் இரும்பு பெண்மணியின்  பிறப்பு  முதல் இறப்பு வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த செய்திக்குறிப்பில் காணலாம். 

1948 – கர்நாடகா மெலுகோட் நகரில் பிறந்தார்

1961 -குழந்தை நட்சத்திரமாகக் கன்னட திரைப்படமான “ஶ்ரீ சைலா மகாத்மே” படத்தில் அறிமுகம் 

1964  – கன்னட படமான “சின்னடா கொம்பே” படத்தில் நடித்தார்

 

1965– தமிழ்த் திரையுலகில்   ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை  படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதே ஆண்டில் எம்ஜிஆருடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜோடி சேர்ந்தார்.

1980 – 300 படங்களுக்கு மேல் நடித்து புகழின் உச்சத்திலிருந்த வேளையில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியல் தடம் படித்தார்.

1982 – அதிமுகவில் இணைந்த  இவர் கடலூரில்  தனது முதல் உரையை நிகழ்த்தினார்

1983 – அதிமுகவின் கொள்கை பரப்புச்செயலாளனார்

1984 – அதிமுகவின் ராஜ்ய சபா எம்பியானார்

1987 – எம்ஜிஆர் மறைவால் அதிமுக இரண்டாக உடைந்தது

1988 – எம்ஜிஆரின் மனைவி ஜானகி ஆட்சி 21 நாட்களில் முடிவுக்கு  வந்து ஜெயலலிதாவின் அரசியல் பயணத்திற்கு முக்கிய தொடக்கமாக அமைந்தது

1989 – சட்டசபையிலிருந்து துரத்தப்பட்ட நிலையில் முதல்வராக தான் சட்டசபைக்குள் நுழைவேன் என்று  சபதம்  ஏற்றார்.

1991 – 225 இடங்களை  கைப்பற்றி முதல்வராக அரியணை ஏறினார்

1996 – சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி 48 வழக்குகள் பதியப்பட்டது.

2001 – டான்சி வழக்கால் தான் போட்டியிடாமல்  போக ஓபிஎஸை முதல்வராக்கினார்

2003 – ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் முதல்வரானார் 

2006 – அதிமுக கூட்டணி படுதோல்வியைத் தழுவியது 

2011 – 203 இடங்களை கைப்பற்றி மீண்டும் முதல்வரானார் 

 

2014 – சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார்

2015 – சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார் 

2016  – மீண்டும் முதல்வராக அரியணை ஏறிய  அவர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி  உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார்.