×

ஜல்லிக்கட்டை காண சிறப்பு பேருந்து ! சுற்றுலாத்துறை ஏற்பாடு !

பொங்கல் திருநாளின்போது மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற உள்ளது. இதைக் காண தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கில் திரள்வர். பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்யும் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சித்துறை இந்த ஜல்லிக் கட்டை காணவும் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்துள்ளது. உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண சிறப்பு சுற்றுலாவை தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. பொங்கல் திருநாளின்போது
 

பொங்கல் திருநாளின்போது மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற உள்ளது. இதைக் காண தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கில் திரள்வர். பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்யும் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சித்துறை இந்த ஜல்லிக் கட்டை காணவும் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண சிறப்பு சுற்றுலாவை தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

பொங்கல் திருநாளின்போது மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற உள்ளது. இதைக் காண தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கில் திரள்வர். பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்யும் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சித்துறை இந்த ஜல்லிக் கட்டை காணவும் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்துள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா துறை அலுவலகத்தில் இருந்து ஜனவரி 16ஆம் தேதி இரவு 9 மணிக்கு சொகுசு பேருந்து புறப்படும். 17ஆம் தேதி காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் சென்றடையும்.

ஜல்லிக்கட்டு முடிந்த பின்னர் அன்றைய தினம் விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்படும். ஜனவரி 18ஆம் தேதி காணும் பொங்கல் அன்று மதுரை மீனாட்சி கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், அழகர் கோயில் ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்து செல்லப்படுவர். 18ஆம் தேதி இரவு 10 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் பேருந்து 19ஆம் தேதி காலை சென்னை வந்தடையும். இதற்கு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 4,300, சிறியவர்களுக்கு (6 -12 வயது) 3,450 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tamilnadutourism.org என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்