×

சேலத்தில் ஒரே நாளில் 60 பேரை கடித்து குதறிய நாய்!

சேலம் மாநகரில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் பாதிக்கபட்டு வருவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் மனு அளித்துள்ளனர் சேலம்: ஒரே நாளில் 60-க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறிய வெறி நாயை சேலம் மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். சேலம் மாநகரில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் பாதிக்கபட்டு வருவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி
 

சேலம் மாநகரில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் பாதிக்கபட்டு வருவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் மனு அளித்துள்ளனர்

சேலம்: ஒரே நாளில் 60-க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறிய வெறி நாயை சேலம் மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.

சேலம் மாநகரில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் பாதிக்கபட்டு வருவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் மனு அளித்துள்ளனர். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனிடையே, சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட களரம்பட்டி, அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரிந்த வெறி நாய் ஒன்று, கடந்த சில நாட்களாக அப்பகுதியில் வருவோர் போவோரை எல்லாம் கடித்து வந்துள்ளது. அந்த வகையில், நேற்று முன்தினம் மட்டும் 60-க்கும் மேற்பட்டவர்களை அந்த நாய் கடித்துள்ளது.

இதனால், பலத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொது மக்களை விரட்டி விரட்டி கடித்த நாயை பிடிக்க, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்கத்தால், பொதுமக்களே அந்த நாய்யை அடித்து கொன்றனர்.

ஒற்றை வெறி நாய் ஏராளமானவர்களை கடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மாநகராட்சி ஊழியர்கள் அலட்சியம் காட்டாமல், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் சுற்றித் திரியும் மற்ற தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் வாசிங்க

இறந்தவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறும் பாசக்கார குரங்கு-வைரல் வீடியோ!