×

செல்போன் பேசிய இளைஞர்களை கண்டித்த முதியவர் கொடூர கொலை!

போலீசார் தப்பியோடிய 2 இளைஞர்களையும் சுவாமிமலையில் வைத்து கைது செய்தனர். கும்பகோணம் : பெண் பிள்ளைகள் இவருக்கும் இடத்தில் செல்போன் பேசாதீர்கள் என்று கூறிய முதியவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருக்கு வயது 65. கூலித்தொழிலாளியாக உள்ளார். அதே பகுதியில் உள்ள பிரகாஷ் என்ற இரண்டு இளைஞர்கள் அடிக்கடி ரத்தினத்தின் வீட்டின் அருகில் நின்று போன் பேசி வந்துள்ளனர். இதை ரத்தினம் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரத்தினத்தை
 

போலீசார்  தப்பியோடிய 2 இளைஞர்களையும்  சுவாமிமலையில் வைத்து கைது செய்தனர். 

கும்பகோணம் : பெண் பிள்ளைகள் இவருக்கும் இடத்தில் செல்போன் பேசாதீர்கள் என்று கூறிய முதியவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருக்கு வயது 65. கூலித்தொழிலாளியாக உள்ளார். அதே பகுதியில் உள்ள பிரகாஷ் என்ற  இரண்டு இளைஞர்கள் அடிக்கடி ரத்தினத்தின் வீட்டின் அருகில் நின்று போன் பேசி வந்துள்ளனர். இதை ரத்தினம் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரத்தினத்தை தாக்கி கீழே தள்ளிவிட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். 

இது குறித்து ரத்தினத்தின் மகன் ராமு  பேரில் போலீசார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  தப்பியோடிய 2 இளைஞர்களையும்  சுவாமிமலையில் வைத்து கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், முதியவர் ரத்தினத்திற்குக் கல்லூரி பயிலும் மகள் உள்ளாராம். அதனால் பெண்பிள்ளைகள் இருக்கும் வீட்டின் முன்பு வந்து போனில் பேசக்கூடாது என்று திட்டியுள்ளார். இதனால்  இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்று போலீசார் தரப்பில் கூறியுள்ளனர்.