×

செல்போன் பார்த்துக்கொண்டே பிரசவம் பார்த்த நர்ஸ்.. உயிரிழந்த குழந்தை : உறவினர்கள் போராட்டம்!

நஸ்ரின் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று மாலை அவருக்குப் பிரசவ வலி வந்துள்ளது. பூந்தமல்லி அடுத்த குமனன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் தமீம் அன்சாரி- நஸ்ரின் தம்பதி. நஸ்ரின் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று மாலை அவருக்குப் பிரசவ வலி வந்துள்ளது. இதனையடுத்து நஸ்ரின் பூந்தமல்லி அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அப்போது அங்கு உரிய டாக்டர்கள் இல்லாததால் அங்கிருந்த செவிலியர் ஒருவர் நஸ்ரினுக்கு பிரசவம் பார்த்த நிலையில், பெண் குழந்தை பிறந்தது
 

நஸ்ரின் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று மாலை அவருக்குப் பிரசவ வலி வந்துள்ளது.

பூந்தமல்லி அடுத்த குமனன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் தமீம் அன்சாரி- நஸ்ரின் தம்பதி. நஸ்ரின் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று மாலை அவருக்குப் பிரசவ வலி வந்துள்ளது. இதனையடுத்து நஸ்ரின் பூந்தமல்லி அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அப்போது அங்கு உரிய டாக்டர்கள் இல்லாததால் அங்கிருந்த செவிலியர் ஒருவர் நஸ்ரினுக்கு பிரசவம் பார்த்த நிலையில், பெண் குழந்தை பிறந்தது என்றும் பிறந்த உடனே உயிரிழந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உரிய டாக்டர்கள் இல்லாமல் செவிலியரே பிரசவம் பார்த்ததாலும்,   செவிலியர் செல்போன் பார்த்துக் கொண்டே சிகிச்சை அளித்ததாலும் தான் குழந்தை இறந்து விட்டதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நஸ்ரினுக்கு உடல் நலம் பாதிக்கப் பட்டதால், அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து வந்து நஸ்ரினின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர். மேலும், தமீம் அன்சாரி கொடுத்ததையடுத்து, பிரேத குழந்தையைப் பிரேதப் பரிசோதனை செய்யச் சம்மதித்துள்ளனர்.