×

செம்மர கடத்தல் கும்பலுக்கிடையே நடந்த சண்டையில் சிக்கி உயிரிழந்த பெண் !

வாணியம்பாடி அருகேயுள்ள பூங்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், அவரின் நண்பர் அசோக் குமார் என்பவர் மூலம் செம்மரம் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். வாணியம்பாடி அருகேயுள்ள பூங்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், அவரின் நண்பர் அசோக் குமார் என்பவர் மூலம் செம்மரம் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரின் மனைவி சாந்திப்பிரியா. சீனிவாசன் சில நாட்களுக்கு முன்னர் அசோகன் மூலம் 7 பேரை ஆந்திராவில் இருந்து செம்மர மரங்களை வெட்டி கடத்தி வருமாறு சொல்லியிருக்கிறார். அவர்களும் செம்மர மரங்களைக்
 

வாணியம்பாடி அருகேயுள்ள பூங்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், அவரின் நண்பர் அசோக் குமார் என்பவர் மூலம் செம்மரம் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வாணியம்பாடி அருகேயுள்ள பூங்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், அவரின் நண்பர் அசோக் குமார் என்பவர் மூலம் செம்மரம் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரின் மனைவி சாந்திப்பிரியா. சீனிவாசன் சில நாட்களுக்கு முன்னர் அசோகன் மூலம் 7 பேரை ஆந்திராவில் இருந்து செம்மர மரங்களை வெட்டி கடத்தி வருமாறு சொல்லியிருக்கிறார். அவர்களும் செம்மர மரங்களைக் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 

மரங்களைக் கடத்தி வந்தும் அவர்களுக்குப் பேசிய பணத்தைக் கொடுக்காமல் சீனிவாசன் இழுக்கடித்துக் கொண்டே வந்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அந்த 7 பேரும் கடந்த 3 ஆம் தேதி சீனிவாசன் வீட்டிற்கு வந்து  அவரை பலமாகத் தாக்கியுள்ளனர். அவர்கள் சீனிவாசனை தாக்குவதைத் தடுப்பதற்காக சாந்திபிரியா வந்துள்ளார். அப்போது தடுக்க முற்பட்ட சாந்தி பிரியாவை அந்த 7 பேரில் ஒருவர் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில், சாந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சாந்தியின் மரணத்திற்குக் காரணமானவர்களைக் கைது செய்யக்கோரி சாந்தியின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த சண்டையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ளனர். மற்ற 4 பேரை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், அவர்கள் உண்மையாகவே செம்மர கடத்தலில் ஈடுபட்டார்களா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.