×

செமஸ்டர் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், முதல் கட்ட தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பள்ளிகள் மேலாக மூடப்பட்டுள்ளதால், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, அண்ணா பல்கலைக் கழகத்தின் கேஎஸ்க்
 

கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், முதல் கட்ட தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பள்ளிகள் மேலாக மூடப்பட்டுள்ளதால், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே, அண்ணா பல்கலைக் கழகத்தின் கேஎஸ்க் இயங்கும் அனைத்து இணைப்புக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் செமெஸ்டர் தேர்வுகள், திட்ட மதிப்பீடுகள் என அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் வகுப்புகள் தொடங்கும் தேதி, இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணைகள் விரைவில் வெளியாகும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.