×

சென்னையில் மீண்டும் தலைதூக்கும் ரூட் தல விவகாரம்! ராயப்பேட்டை கல்லூரி மாணவர்கள் கைது?

பாத்ரூமில் வழுக்கு விழுந்து கையில் கட்டுப் போடுவதன் மூலம் சென்னை மாநகர பேருந்துகளில் நீடித்துவந்த பஸ் தினம், ரூட் தல பிரச்னைகள் முடிவுக்கு வந்தன. தற்போது மீண்டும் பஸ்களில் ரூட் தல பிரச்னை முளைக்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாத்ரூமில் வழுக்கு விழுந்து கையில் கட்டுப் போடுவதன் மூலம் சென்னை மாநகர பேருந்துகளில் நீடித்துவந்த பஸ் தினம், ரூட் தல பிரச்னைகள் முடிவுக்கு வந்தன. தற்போது மீண்டும் பஸ்களில் ரூட் தல பிரச்னை முளைக்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியை
 

பாத்ரூமில் வழுக்கு விழுந்து கையில் கட்டுப் போடுவதன் மூலம் சென்னை மாநகர பேருந்துகளில் நீடித்துவந்த பஸ் தினம், ரூட் தல பிரச்னைகள் முடிவுக்கு வந்தன. தற்போது மீண்டும் பஸ்களில் ரூட் தல பிரச்னை முளைக்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாத்ரூமில் வழுக்கு விழுந்து கையில் கட்டுப் போடுவதன் மூலம் சென்னை மாநகர பேருந்துகளில் நீடித்துவந்த பஸ் தினம், ரூட் தல பிரச்னைகள் முடிவுக்கு வந்தன. தற்போது மீண்டும் பஸ்களில் ரூட் தல பிரச்னை முளைக்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநகர பேருந்துகளை கடத்திக்கொண்டு சென்று பஸ் தினம் கொண்டாடுவது, பஸ்ஸின் கூரையில் நின்றுகொண்டும், அமர்ந்துகொண்டும் கானா பாடல் பாடி பேருந்தில் உள்ளவர்கள், சாலையில் செல்பவர்களை எரிச்சலடைய செய்வது என்று கல்லூரி மாணவர்கள் செய்துவந்த அட்டகாசங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. பஸ் ரூட்டில் யார் கிங் என்பதை அறிய கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரூட் தல மோதல்கள் வந்துகொண்டிருந்தன. கையில் பட்டாக்கத்தியோடு சண்டைபோட்ட சம்பவங்கள் அதிகரித்தன. இதைத் தொடர்ந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் கண்காணிக்கப்பட்டனர். ரூட் தலை மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையில் மாவு கட்டும் போட்டனர். போலீஸ் நடவடிக்கை தீவிரமாகவே ரூட் தல பிரச்னை அடங்கியது. மாணவர்கள் ஒழுங்காகக் கல்லூரிக்கு மட்டும் சென்று வந்துகொண்டிருந்தனர்.

இந்தநிலையில், சென்னையில் மீண்டும் ரூட் தல பிரச்னை தொடங்க ஆரம்பித்துள்ளது. நேற்று (ஜனவரி 6ம் தேதி) மந்தைவெளியிலிருந்து பிராட்வே சென்றுகொண்டிருந்த பஸ் ராயப்பேட்டை வந்தது. அப்போது பஸ்ஸில் ஏறிய சில மாணவர்கள் கூரையில் ஏறி அமர்ந்துகொண்டனர். நடத்துநர் சொல்லியும் அவர்கள் கீழே இறங்கவில்லை. பஸ் பல்லவன் சாலை அருகே வந்தபோது, பைக்கில் வந்த சில மாணவர்களுடன் இவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள்ளாக மாணவர்கள் செய்யும் அட்டகாசம் குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், அங்கு விரைந்துவந்த போலீசார் மாணவர்களை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பயணிகள் கூறும்போது, “மாணவர்கள் தொடர்ந்து அராஜகமாக நடந்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடம் பல முறை புகார் கூறிவிட்டோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இனி போலீஸ்தான் கடும் நடவடிக்கை எடுத்து, இனி இதுபோன்று சம்பவங்கள் நடைபெறவதை தடுக்க வேண்டும்” என்றனர்.