×

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் மண்டல வாரியான விவரம்!

முதல் மூன்று இடங்களில் தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி இருக்கிறது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் அபாய கட்டத்தில் இந்தியா இருப்பதால் மக்களை அதிலிருந்து காக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் அவரவர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக நேற்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியாவிலேயே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் மூன்று இடங்களில் தமிழகம், மகாராஷ்டிரா மற்றும்
 

முதல் மூன்று இடங்களில் தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி இருக்கிறது.

கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் அபாய கட்டத்தில் இந்தியா இருப்பதால் மக்களை அதிலிருந்து காக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் அவரவர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக நேற்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியாவிலேயே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் மூன்று இடங்களில் தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி இருக்கிறது. இதனால் அந்தந்த மாநிலங்கள் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றன. 

தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களை தமிழக அரசு ரெட் அலெர்ட் பகுதியாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியின் மண்டல வாரியான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரம் மண்டலம் -63 பேர், திரு.வி.க மண்டலம்-28 பேர், கோடம்பாக்கம் மண்டலம்- 23 பேர், அண்ணா நகர் மண்டலம்-22 பேர் மற்றும் தண்டையார் பேட்டை மண்டலததில் 29 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.