×

சென்னையில் கொரோனா பாதிப்பு 373 ஆக உயர்வு.. மண்டலவாரி பட்டியல் உள்ளே!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1600ஐ எட்டியுள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 21,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 681 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1600ஐ எட்டியுள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அதனால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்படைந்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அதே போல பாதிக்கப்பட்ட
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1600ஐ எட்டியுள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 21,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 681 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1600ஐ எட்டியுள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அதனால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்படைந்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அதே போல பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றி 2 கி.மீ அளவிற்கு தன்னார்வலர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண்டலவாரியான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிக அளவில், ராயபுரத்தில் 117 பேரும் , தண்டையார்பேட்டையில் 46 பேரும் , திரு.வி.க நகரில் 45 பேரும் , அண்ணா நகரில் 32 பேரும் , தேனாம்பேட்டையில் 44 பேரும் , கோடம்பாக்கத்தில் 36 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் மொத்தமாக  373 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.