×

சென்னையில் உள்ள அரசுப்பள்ளியைத் தத்தெடுத்து உதவும் காவலர்கள் : குவியும் பாராட்டுக்கள் !

திருமங்கலத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளி 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. துவக்கத்தில் காலத்தில் ஆரம்பப்பள்ளியாக இருந்த இந்த பள்ளி, கடந்த 2017 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. சென்னை திருமங்கலத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளி 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. துவக்கத்தில் காலத்தில் ஆரம்பப்பள்ளியாக இருந்த இந்த பள்ளி, கடந்த 2017 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதில் தற்போது, 135 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் உள்ளனர். அரசுப் பள்ளி ஒன்றைத்
 

திருமங்கலத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளி 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. துவக்கத்தில் காலத்தில் ஆரம்பப்பள்ளியாக இருந்த இந்த பள்ளி, கடந்த 2017 ஆம் ஆண்டு  உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

சென்னை திருமங்கலத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளி 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. துவக்கத்தில் காலத்தில் ஆரம்பப்பள்ளியாக இருந்த இந்த பள்ளி, கடந்த 2017 ஆம் ஆண்டு  உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதில் தற்போது, 135 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் உள்ளனர். அரசுப் பள்ளி ஒன்றைத் தத்தெடுத்து அதற்கு உதவுவது குறித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தனது விருப்பத்தை காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி மற்றும் காவல் ஆய்வாளர் ரவி உள்ளிட்டோர் அதற்குச் சம்மதித்து இந்த அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளனர். இந்த பள்ளிக்குத் தேவையான மேசைகள், நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்து கொடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், அதில் பயிலும் ஏழை மாணவர்களுக்காக நிதி திரட்டுவதன் மூலம் அப்பள்ளியின் கட்டிடத்தைப் புதுப்பிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். 

இது குறித்துப் பேசிய காவல் ஆய்வாளர் ரவி , இத்தகைய உதவிகளின் மூலம் மாணவர்களுடன் பேச நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்களும் குழந்தைகளும் காவல்துறையினரைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்தார். இது குறித்துப் பேசிய அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், காவலர்கள் இந்த பள்ளியைத் தத்தெடுப்பதற்கு முன்னர் இந்த பள்ளி மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து விட்டுச் செல்லும் இடமாக இருந்தது. ஆனால், தற்போது அனைத்தும் மாறிவிட்டது. நாங்கள் கேட்ட சிறு உதவிகளை கூட காவல்துறையினர் செய்கின்றனர். இதனால், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது. என்று தெரிவித்துள்ளார். காவலர்களின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.