×

சென்னையில் 3 மண்டலங்களில் மட்டுமே அதிக கொரோனா பாதிப்பு : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதனால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் 3 மண்டலங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக
 

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதனால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் 3 மண்டலங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் இருந்து 60% பாதிப்பு இருப்பதாகவும் ஜூலை மாத இறுதிக்குள் பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்க வார்டு வாரியாக கணக்கெடுத்துள்ளதாகவும் மொத்தமாக 59,679 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகவும் வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் நபர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.