×

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது!

700க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் 2 கோடி புத்தகங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியானது இந்த ஆண்டு இன்று தொடங்கி ஜனவரி 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 43வது சென்னை புத்தகக் கண்காட்சியானது தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 700க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் 2 கோடி புத்தகங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
 

 700க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் 2 கோடி புத்தகங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் நடைபெறும்  சென்னை புத்தகக் கண்காட்சியானது இந்த ஆண்டு இன்று தொடங்கி ஜனவரி 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 43வது சென்னை  புத்தகக் கண்காட்சியானது  தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு  700க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் 2 கோடி புத்தகங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு புத்தகக் கண்காட்சியை துவங்கி வைக்கிறார். விழாவில் அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். தினமும் மதியம் 3 மணி முதல் இரவு 9 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ள  இந்த கண்காட்சியானது சனி மற்றும் ஞாயிறு  போன்ற விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.  இதற்கான நுழைவுக்கட்டணம் ரூ. 10 ஆகும். இங்கு இணையதளம் வழியாகவும் நுழைவுச்சீட்டு பெறலாம்.

அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை. அவர்களுக்கான அனுமதிச்சீட்டு கல்விநிறுவனங்களிடம் கொடுக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் மூலம் கண்காட்சிக்கு வந்தால், பயண அட்டையைக் காண்பித்து இலவச அனுமதியைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக இங்கு கீழடி – ஈரடி என்ற தலைப்பில் தொல்லியல் துறை சார்பில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.