×

சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு… ரூ.20 கோடிக்கு விற்பனையான புத்தகங்கள்!

சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று (21 ஜனவரி) நிறைவடைந்தது. இந்த கண்காட்சியில் ரூ.20 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையானது என்று பபாசி தெரிவித்துள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று (21 ஜனவரி) நிறைவடைந்தது. இந்த கண்காட்சியில் ரூ.20 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையானது என்று பபாசி தெரிவித்துள்ளது. 43வது சென்னை புத்தக கண்காட்சி கடந்த 9ம் தேதி தொடங்கியது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சிக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
 

சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று (21 ஜனவரி) நிறைவடைந்தது. இந்த கண்காட்சியில் ரூ.20 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையானது என்று பபாசி தெரிவித்துள்ளது.

சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று (21 ஜனவரி) நிறைவடைந்தது. இந்த கண்காட்சியில் ரூ.20 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையானது என்று பபாசி தெரிவித்துள்ளது.

43வது சென்னை புத்தக கண்காட்சி கடந்த 9ம் தேதி தொடங்கியது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சிக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். 13 நாட்கள் நடந்த புத்தகக் கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. இது குறித்து பபாசி நிர்வாகிகள் கூறுகையில், “பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் புத்தகக் கண்காட்சிக்கு வந்தனர்

. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகளில் இருந்தும் சிலர் இந்த புத்தகக் கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கினர். 700க்கும் மேற்பட்ட அரங்குகளிலிருந்து 16 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டைவிட 20 சதவிகிதம் அதிகம். இந்த ஆண்டு நடந்த புத்தகக் கண்காட்சிக்கு 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர்” என்றனர்.