×

சென்னை எழும்பூரில் 300 ஆண்டு பழைமையான ரகசிய சங்கம்?

உலகில் எத்தனையோ ரகசிய சங்கங்கள் இருந்தாலும் அதில்,இரண்டு சீக்ரெட் சொசைட்டிகள் ரொம்ப ஃபேமஸ்.ஒன்று இலுமினாட்டி,மற்றொன்று ஃபிரீமேஸன்ஸ்! உலகில் எத்தனையோ ரகசிய சங்கங்கள் இருந்தாலும் அதில்,இரண்டு சீக்ரெட் சொசைட்டிகள் ரொம்ப ஃபேமஸ்.ஒன்று இலுமினாட்டி,மற்றொன்று ஃபிரீமேஸன்ஸ்! இலுமினாட்டி இந்தியாவில் காலூன்றியது பற்றி தகவலில்லை.வாட்ஸப் வதந்திகளை தவிர்த்து.ஆனால் ஃபிரிமேஸன்ஸ் இந்தியாவில் இருந்தது. இப்போதும் இருக்கிறது,அதுவும் சென்னை எழும்பூரிலேயே இருக்கிறது. 1425-ல் எகிப்தில் துவங்கப்பட்ட ஃபிரீமேசஸன்ஸ் சங்கம் பற்றி நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டு விட்டன.ஆனாலும் அவர்கள் பற்றிய வதந்திகளுக்கு பஞ்சமே இல்லை! முக்கியமாக
 

உலகில் எத்தனையோ ரகசிய சங்கங்கள் இருந்தாலும் அதில்,இரண்டு சீக்ரெட் சொசைட்டிகள் ரொம்ப ஃபேமஸ்.ஒன்று இலுமினாட்டி,மற்றொன்று ஃபிரீமேஸன்ஸ்!

உலகில் எத்தனையோ ரகசிய சங்கங்கள் இருந்தாலும் அதில்,இரண்டு சீக்ரெட் சொசைட்டிகள் ரொம்ப ஃபேமஸ்.ஒன்று இலுமினாட்டி,மற்றொன்று ஃபிரீமேஸன்ஸ்!

இலுமினாட்டி இந்தியாவில் காலூன்றியது பற்றி தகவலில்லை.வாட்ஸப் வதந்திகளை தவிர்த்து.ஆனால் ஃபிரிமேஸன்ஸ் இந்தியாவில் இருந்தது. இப்போதும் இருக்கிறது,அதுவும் சென்னை எழும்பூரிலேயே இருக்கிறது.

1425-ல் எகிப்தில் துவங்கப்பட்ட ஃபிரீமேசஸன்ஸ் சங்கம் பற்றி நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டு விட்டன.ஆனாலும் அவர்கள் பற்றிய வதந்திகளுக்கு பஞ்சமே இல்லை! முக்கியமாக அவர்களது கணக்கற்ற செல்வம் பலரை பயமுறுத்தி இருக்கிறது.

உதாரணமாக  முதல் அமெரிக்க அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் ஒரு ஃபிரீமேஸன்.அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தின் அடியிலேயே ஃபிரீமேஸ்ன்களின் லாட்ஜ் என்கிற வழிபாட்டிடம் இருந்தது,என்கிற அளவு உச்சகட்ட வதந்திகள் உலவுகின்றன.

இந்தியாவில் முதல் மேஸனிக் லாட்ஜ் துவங்கப்பட்டது கல்கத்தாவில். அதற்கடுத்து அன்றைய மெட்ராஸ் என்கிற சென்னையில்.இன்றும் சென்னை எழும்பூரையும் அண்ணா சாலையையும் இணைக்கும் எத்திராஜ் சாலையில் ஒரு ஃபிரீமேஸன் லாட்ஜ் இருக்கிறது. சாலையில் நீலநிற பின்னணியில் வெள்ளை எழுத்தில் ஃபிரீமேஸன் லாட்ஜ் என்று போர்டே இருக்கிறது.உள்ளே 20 ஏக்கர் பரப்பளவில் ஆளரவமற்ற ஒரு பிரமாண்ட பங்களா இருக்கிறது.

இது தவிர சென்னை கடற்கரை சாலையில் இருக்கும் டி.ஜி.பி அலுவலகக் கட்டிடமே ஒரு காலத்தில் அவர்கள் சொத்துதான்.பின்னால் காவல் துறைக்கு விற்கப்பட்டு விட்டது என்று சொல்லப்படுகிறது.ஸ்டான்லி மருத்துவமனை அருகில் இருக்கும் பாரதி மகளீர் கல்லூரி கட்டிடமும் இவர்களுடையதுதானாம்.

இந்திய ஃபிரீமேஸன்கள் போரில் இறந்துபோன தங்களது சங்கத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு உருவாக்கிய அனாதை இல்லம்தான் இன்றைய,கீழ்பாக்கம் செய்ண்ட் ஜார்ஜ் பள்ளி .இது போல உலகெங்கும் பல நற்காரியங்களை செய்திருந்தாலும்,அதற்காக அவர்கள் பொது சமூகத்திடம் நிதி திறட்டுவதில்லை,எல்லாம் அவர்களது உறுப்பினர் இடையே மட்டுமே.

துவக்கத்தில் ஆங்கிலேயர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எஃப்.டபிள்யூ எல்லிஸ் ஒரு ஃபிரீமேசன்.சென்னையில் இவர் பெயரில் ஒரு சாலை இருக்கிறது. வெண்பா எழுதும் அளவுக்கு தமிழ் புலமை பெற்றவர் எல்லிஸ்.இந்தியர்கள் பின்னர் மெல்ல மெல்ல சேர்த்துக்கொள்ள பட்டிருக்கிறார்கள். 

முக்கியமாக கட்டிட கலைஞர்கள்.கட்டிட கலைஞர்களின் உபகரணங்களைக் கொண்டுதான் ஃபிரீமேஸன் சின்னமே உருவாக்கப்பட்டு இருக்கிறது.நிறைய கலைஞர்களும் இதில் மெம்பராக இருந்திருக்கிறார்கள்.நவீன தமிழ் நாடக உலகை தோற்றுவித்த பம்மல் சம்பந்த முதலியரும் இந்த ரகசிய சங்கத்தை சேர்ந்தவர்தான்.

இவர்கள் இப்போதும் உலகெங்கும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லா மதத்தினரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இறை நம்பிக்கையும் சேவை மனப்பான்மையும்தான் அடிப்படைத் தகுதி என்கிறார்கள். இதுவும் வதந்திதானா என்பது தெரியவில்லை!