×

செங்கோட்டைக்கு ஏசியில்லாத படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கம் !

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இன்று முதல் மாலை 5 மணிக்கு புதியதாகக் குளிர் சாதன வசதியில்லா படுக்கை வசதியோடு கூடிய அரசு விரைவு பேருந்து இயக்கம் தொடங்குகிறது. கடந்த ஆண்டு (2018) ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் 515 புதிய பேருந்துகள் புதிதாக இயக்கப்பட்டது. அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். புதிதாக இயக்கப்பட்ட அந்த பேருந்துகளில் 38 பேருந்துகள் படுக்கை வசதியுடன் 8 பேருந்துகள் கழிவறை வசதியுடன் இருந்தது. இதில் பயணிகள்
 

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு  இன்று முதல் மாலை 5 மணிக்கு புதியதாகக் குளிர் சாதன வசதியில்லா படுக்கை வசதியோடு கூடிய அரசு விரைவு பேருந்து இயக்கம் தொடங்குகிறது.

கடந்த ஆண்டு (2018) ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் 515 புதிய பேருந்துகள் புதிதாக இயக்கப்பட்டது. அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். புதிதாக இயக்கப்பட்ட அந்த பேருந்துகளில் 38 பேருந்துகள் படுக்கை வசதியுடன் 8 பேருந்துகள் கழிவறை வசதியுடன் இருந்தது. இதில் பயணிகள் மகிழ்ச்சியாகப் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு  இன்று முதல் மாலை 5 மணிக்கு புதியதாகக் குளிர் சாதன வசதியில்லா படுக்கை வசதியோடு கூடிய அரசு விரைவு பேருந்து இயக்கம் தொடங்குகிறது.
இந்த பேருந்தில் இருக்கைக கட்டணம் ரூபாய் 670 மற்றும் படுக்கை வசதிக்குக் கட்டணம் ரூபாய்.1,015 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, செங்கோட்டையில் இருந்து சென்னைக்க ஏ.சி மற்றும் படுக்கை வசதியோடு கூடிய பேருந்துகளின் கட்டணம் இருக்கைக்கு ரூ.840 மற்றும் படுக்கை வசதிக்கு ரூ.1200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.