×

செக்ஸ் புகார் எதிரொலி… நிர்மலா தேவி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்!

இவர்களின் மீதான வழக்கு விசாரணையின் போது ஆஜரான அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட் கிளையில் ஜூலை 1ஆம் தேதி இந்த வழக்கில் உள்ள தடை ஆணை குறித்த விசாரணை வருகிறது என்று கூறினார் ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டார் நிர்மலா தேவி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரானார் கல்லூரி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, அவர்களைத் தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டார் பேராசிரியர் நிர்மலா தேவி. பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.
 

இவர்களின் மீதான வழக்கு விசாரணையின் போது ஆஜரான அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட் கிளையில் ஜூலை 1ஆம் தேதி இந்த வழக்கில் உள்ள தடை ஆணை குறித்த விசாரணை வருகிறது என்று கூறினார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டார் நிர்மலா தேவி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரானார்

கல்லூரி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, அவர்களைத் தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டார் பேராசிரியர் நிர்மலா தேவி. பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இவரது கைதுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பெண்கள் கல்லூரிகளில், மாணவிகள் துணிச்சலாக புகார் தெரிவிக்கும் முறை கொண்டு வரப்பட்டது. 

இந்நிலையில், ஜாமினில் வெளிவந்த பேராசிரியை நிர்மலா தேவி, இன்று பிற்பகல் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரானர். அவருடன் இந்த வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் ஆஜரானார்கள்.

இவர்களின் மீதான வழக்கு விசாரணையின் போது ஆஜரான அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட் கிளையில் ஜூலை 1ஆம் தேதி இந்த வழக்கில் உள்ள தடை ஆணை குறித்த விசாரணை வருகிறது என்று கூறினார். இதையடுத்து இந்த வழக்கை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்றைய தினம் வழக்கு விசாரணையில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.