×

‘சூடா தோசையும், பீப் கறியும் எங்க கிடைக்கும்’ வெளிநாட்டில் உள்ள தைரியத்தில் போலீஸை சீண்டிய இளைஞர்கள்!

கடந்த சில நாட்களாக காவல்துறை தவறான கருத்துக்களும் தகவல்களும் பதிவிடப்பட்டு வந்தது தெரியவந்தது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அரசு துறைகள் இணையத்தில் படுவேகமாக இயங்கி வருகின்றனர். அந்த வகையில் பேஸ்புக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் போலீஸ் (Kanyakumari District Police) என்ற பேஸ்புக் பேஜ் உள்ளது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பேஸ்புக் பேஜில், கடந்த சில நாட்களாக காவல்துறை தவறான கருத்துக்களும் தகவல்களும் பதிவிடப்பட்டு
 

கடந்த சில நாட்களாக  காவல்துறை  தவறான கருத்துக்களும் தகவல்களும் பதிவிடப்பட்டு  வந்தது தெரியவந்தது

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அரசு துறைகள் இணையத்தில் படுவேகமாக இயங்கி வருகின்றனர். அந்த  வகையில் பேஸ்புக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் போலீஸ் (Kanyakumari District Police) என்ற பேஸ்புக் பேஜ் உள்ளது. 

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பேஸ்புக் பேஜில்,  கடந்த சில நாட்களாக  காவல்துறை  தவறான கருத்துக்களும் தகவல்களும் பதிவிடப்பட்டு  வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், வல்லுநர்களை வைத்து மீண்டும் பேஸ்புக் பேஜை மீட்டனர். மேலும் இதை யார் செய்தார்கள் என்று விசாரணையில் குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த ஜெரூன், வினீஸ், பிரைட் சிங், மார்சியன் ஆண்டனி ஆகியோர் தான் என்பது தெரியவந்தது. இவர்கள் வெளிநாட்டில் பணிசெய்து வருகிறார்கள். 

இவர்கள் நால்வரும், கன்னியாகுமரி டிஸ்டிரிக்ட் போலீஸ் சார் ராத்திரி 12 மணிக்கு மேல சூடா தோசையும், பீப் கறியும் எங்க கிடைக்கும் என அனு டியர் கேட்க சொன்னான் என்பது போல கேலி கிண்டலான  கருத்துக்களையும் இவர்கள் பதிவிட்டு வந்துள்ளனர். 

 இந்நிலையில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த ஜெரூன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரை கண்டித்து நிபந்தனை ஜாமீன் கொடுத்தனர், மற்ற மூவரையும் கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.