×

சுவர் இடிந்து உயிரிழந்த மகன்,மகளின் கண்கள் ‘தானம்’: மீளாத்துயரிலும் தியாகம் செய்த தந்தை !

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நேற்று அப்பகுதியில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நேற்று அப்பகுதியில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் செல்வராஜ் என்ற டீக்கடை தொழிலாளியின் மகன் மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர்.
 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நேற்று அப்பகுதியில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நேற்று அப்பகுதியில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் செல்வராஜ் என்ற டீக்கடை தொழிலாளியின் மகன் மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர். செல்வராஜின் மகள் கல்லூரி முதலாம் ஆண்டும் அவரின் மகன் 10 ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். செல்வராஜின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். அதனால், அவர்கள் இருவரையும் அவர்களது சித்தி சிவகாமி வளர்த்து வந்துள்ளார். 

சிவகாமியின் வீட்டில் இருந்து செல்வராஜின் வீடு சற்று தொலைவில் அமைந்துள்ளது . சம்பவம் நடந்த அன்று அவரது மகன் மற்றும் மகள் இருவரும் அவர்களின் சித்தி வீட்டிலேயே உறங்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  

இது குறித்துப் பேசிய செல்வராஜ், சம்பவம் நிகழ்ந்த அன்று நான் டீ கடையிலேயே உறங்கி விட்டேன். வீட்டிற்குச் செல்லவில்லை. என் பிள்ளைகள் உயிரிழந்தது எனக்குக் காலையில் தான் தெரியும். என் மனைவியும் இறந்துவிட்டாள். மகள்களும் இறந்து விட்டனர். தற்போது நான் அனாதையாக நிற்கிறேன் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், தன் மகள் மற்றும் மகனின் 4 கண்களையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குத் தானமாகக் கொடுத்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார். குடும்பத்தையே இழந்து தவிக்கும் செல்வராஜ் மீளாத்துயரிலும் தன் பிள்ளைகளின் கண்களை தானம் செய்தது அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது.