×

சுட்டுக் கொல்லபட்ட களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி !

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள் என்று வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழக தனிப்படைபோலீசார்
 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள் என்று வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழக தனிப்படைபோலீசார் விசாரித்து வந்த எஸ்.ஐ வில்சனின் கொலை வழக்கு கடந்த 3 ஆம் தேதி என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. 

இதனையடுத்து எஸ்.ஐ வில்சனின் கொலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தனிப்படை போலீசார் என்.ஐ.ஏ விடம் ஒப்படைத்தனர். வில்சனின் கொலை தொடர்பாக அனைத்து விசாரணையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, எஸ்.ஐ வில்சன் கொலை செய்யபட்ட ஒரு சில நாட்களிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார். இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் மகள் ஆன்றீஸ் ரிநிஜாவிற்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. அதனைக் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.