×

சுடுகாட்டுக்கு செல்ல அனுமதி மறுப்பு! பாலத்தில் இருந்து சடலம் இறக்கிய விவகாரம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான நாராயணபுரம் கிராமத்தில் பட்டியலினத்தவர்கள் வசிக்கும் காலனி உள்ளது. வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான நாராயணபுரம் கிராமத்தில் பட்டியலினத்தவர்கள் வசிக்கும் காலனி உள்ளது. இந்த காலனி அருகே சுமார் 60 அடி தொலைவில் அமைந்துள்ள இடத்தை இவர்கள் சுடுகாடாக பயன்படுத்திவந்தனர். ஆனால், விவசாய நிலம் வழியே பட்டிலின மக்கள் சடலத்தை கொண்டு செல்ல, விவசாயிகள் அனுமதிக்கவில்லை. வீட்டின் அருகே உள்ள சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாமல், ஒரு
 

வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான நாராயணபுரம்  கிராமத்தில் ‌பட்டியலினத்தவர்கள் வசிக்கும் காலனி உள்ளது.

வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான நாராயணபுரம்  கிராமத்தில் ‌பட்டியலினத்தவர்கள் வசிக்கும் காலனி உள்ளது. இந்த காலனி அருகே சுமார் 60 அடி தொலைவில் அமைந்துள்ள இடத்தை இவர்கள் சுடுகாடாக பயன்படுத்திவந்தனர். ஆனால், விவசாய நிலம் வழியே ‌பட்டி‌லின மக்கள் சடலத்தை கொண்டு செல்ல, விவசாயிகள் அனுமதிக்கவில்லை. வீட்டின் அருகே உள்ள சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாமல், ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று, மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கி ஆற்றுப்பகுதியில் இவர்கள் உடலை தகனம் செய்தனர். 

இதுகுறித்த செய்தி வெளியானதையடுத்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தின் உத்தரவின்பேரில், வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் தலைமையிலான‌ வருவாய்துறையினர் பத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதிக்குச்சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்த‌ நடத்தினர். அப்போது விவசாய நிலத்தின் வழியாக யாரும் வரவேண்டாம் என்றும் அதற்கான இடத்தை தரமாட்டோம் என்றும் விவசாயிகள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட பணதோப்பு பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான சுமார் 3.16 ஏக்கர் நிலத்தில் 50 சென்ட் நிலத்தை நாராயணபுரம் காலனி மக்கள் மயானமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.  

வருவாய் துறையினர் மற்றும் நில அளவையர் என அனைவரும் வந்து பண தோப்பு பகுதியில் உள்ள இடத்தை ஆய்வு செய்து ‌ஐம்பது சென்ட் இடத்தை ஒதுக்கினர். விரைவில் தகனமேடை உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் இப்போது முதலே இந்த சுடுகாட்டை பட்டியலின மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் வட்டாட்சியர் தெரிவித்தார்.

மேம்பாலத்திலிருந்து சடலத்தை கட்டி இறக்கிய விவகாரத்தை தாமாக முன்வைந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.