×

சுஜித் மீட்பு பணியை பார்த்து கொண்டிருந்த கணநேரத்தில் மகளை பறிகொடுத்த தம்பதி!

குழந்தையை மீது மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுஜித் மீட்பு பணியை டிவி நேரலையில் பார்த்து கொண்டிருந்த தூத்துக்குடி தம்பதிக்கு அதே மாதிரி ஒரு சம்பவம் தங்கள் வீட்டிலும் நடந்தது மீளா துயத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கியதிலிருந்தே தமிழக மக்கள் டிவியை விட்டு நகராமல் என்ன நடந்தது? குழந்தை மீட்கப்பட்டு விட்டதா என்றே கவனித்து வந்தனர். காலை எழுந்ததும் குழந்தைக்கு என்னவானது என்று பார்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டனர்.
 

குழந்தையை மீது மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுஜித் மீட்பு பணியை டிவி நேரலையில் பார்த்து கொண்டிருந்த தூத்துக்குடி தம்பதிக்கு அதே மாதிரி ஒரு சம்பவம் தங்கள் வீட்டிலும் நடந்தது மீளா துயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கியதிலிருந்தே தமிழக மக்கள்  டிவியை விட்டு நகராமல் என்ன நடந்தது? குழந்தை மீட்கப்பட்டு விட்டதா என்றே கவனித்து வந்தனர். காலை எழுந்ததும் குழந்தைக்கு என்னவானது என்று பார்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த அளவிற்கு குழந்தை குறித்த சிறு சிறு தகவலும் டிவி நேரலையில் ஒளிபரப்பாகிய வண்ணமே இருந்தன. 

ஆனால்  இந்த துயர சம்பவத்துக்கு மத்தியில் இன்னொரு குழந்தையும் அலட்சியத்தால் பறிபோயுள்ளது. ஆம்..மதுரை  மாவட்டம் தெரசபுரத்தில் வசிப்பவர் லிங்கேஸ்வரன். இவருக்கு  நிஷா என்ற மனைவியும்  ரேவதி சஞ்சனா என்ற இரண்டு வயது பெண் குழந்தையும் உள்ளனர்.  லிங்கேஸ்வரனும் நிஷாவும் சுஜித் மீட்பு பணியின் தீவிரம் குறித்து டிவி நேரலையில் பார்த்து கொண்டிருந்தனர். 

இந்நிலையில்  வீட்டில் விளையாடி கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை ரேவதி சஞ்சனா  தனது வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்துள்ளது. குழந்தையை நீண்ட நேரமாகியும் காணவில்லையே என்று சென்று பார்த்த பெற்றோருக்கு குழந்தை தண்ணீர் தொட்டியில் மூச்சு பேச்சின்றி  கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே குழந்தையை  மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.