×

சுஜித் மீட்பு பணிக்கு இத்தனை கோடி செலவாம்! ராதா கிருஷ்ணன் விளக்கம்

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்தான். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்தான். 5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்றிரவு 2.30 மணியளவில் சுர்ஜித் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பின் பிரேத பரிசோதனைக்கு முடிவுற்றபின் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில
 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை  5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்தான்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை  5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்தான்.  5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்றிரவு 2.30 மணியளவில் சுர்ஜித் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பின் பிரேத பரிசோதனைக்கு முடிவுற்றபின் நல்லடக்கம் செய்யப்பட்டது.  கடந்த சில நாட்களாக 88 அடி குழிக்குள் இருந்த சுர்ஜித் மேலும் கீழே சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவரது கைகள் ஏர்லாக் மூலம் பிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுர்ஜித் மீட்கப்பட்டவுடன் அவரது முகம் மற்றும் உடல்கள் யாருக்கும் காட்டப்படவில்லை. குழந்தையின் இழப்பிற்கு தமிழகமே இரங்கல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சுஜித்தின் மீட்பு பணிக்கு செலவான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

1. சுஜீத் மீட்பு பணியாளர்கள் கூலி+உணவு+இதர உட்பட தலா 3000 ரூபாய் * 500 நபர்கள் = 15 இலட்சம் * 4 நாட்கள் => 60 இலட்சம். ( குறிப்பு: அங்கு பணி செய்த எவரும் கூலி பணத்திற்காக செய்யவில்லை )

2. ரிக் இயந்திர வாடகை தலா ஒரு அடிக்கு 20000 ரூபாய் * 100 அடி = 20 இலட்சம். ( குறிப்பு: ரிக் இயந்திர பணியாளர்கள் கூலி உட்பட ).

3. போர்வெல் இயந்திர வாடகை தலா ஓரு அடிக்கு 10000 ரூபாய் * 100 அடி = 10 இலட்சம். ( குறிப்பு : போர்வெல் இயந்திர பணியாளர்கள் உட்பட ).

4. தன்னார்வா மீட்பு குழுவினர்களுக்கு தலா ஒரு குழுவிற்கு 3 இலட்சம் * 20 குழு => 60 இலட்சம்.  ( குறிப்பு : தன்னார்வ குழு தான்).

5. சுஜீத் மீட்பு பணியில் ஈடுபட்டியிருந்த தமிழக அமைச்சர்கள் பெருமக்களுக்கான ஒரு நாளைக்கு கூலி அல்லது வாடகை 5 இலட்சம் * 5 அமைச்சர்கள் = 25 இலட்சம் * 4 நாட்கள் => 1 கோடி  ( குறிப்பு : உணவு உட்பட ).

6. சுஜீத் மீட்பு பணியில் ஈடுபட்டியிருந்த தமிழக அரசின் MLA & MP பெருமக்களுக்கான ஒரு நாளைக்கு கூலி 2 இலட்சம் * 15 MLA MP க்கள் = 30 இலட்சம் * 4 நாட்கள் => 1.20 கோடி ( குறிப்பு : உணவு உட்பட ).

6. மீட்பு பணியின் போது காவல் பணி செய்த காவல் துறைக்கான வாடகை ஒரு நாளைக்கு 5 இலட்சம் * 4 நாட்கள் = 20 இலட்சம் ( குறிப்பு : உணவு உட்பட ).

7. மீட்பு பணிக்கான இதர இயந்திரங்கள் வாடகை தலா ஒரு நாளைக்கு 10 இலட்சம் * 4 நாட்கள் = 40 இலட்சம்.

8. மீட்பு பணிக்கான தமிழக அரசின் மருத்துவ குழுவிற்கான வாடகை தலா ஒரு நாளைக்கு 10 இலட்சம் * 4 நாட்கள் = 40 இலட்சம்.

9. மீட்பு பணியில் ஈடுபட்டியிருந்த தமிழக அரசின் தீயணைப்பு துறைக்கான வாடகை தலா ஒரு நாளைக்கு 20 இலட்சம் * 4 நாட்கள் => 80 இலட்சம் ( குறிப்பு: அதி நவீன மீட்பு தொழில் நுட்ப கருவியான 4 மொள கயிற்றை கூட கொண்டு வரவில்லை).

10. இறுதியாக சுஜீத்யை மீட்க 110 அடி நீளமுடைய கயிறு வாங்க தலா 30 ரூபாய் * 110 அடி கயிறு => 3,300 ரூபாய்.

11. மீட்ட சுஜீத் உடலை பிரேத பரிசோதணைக் கூடத்திற்கு கொண்டு சென்ற தமிழக அரசின் 108 வாகன வாடகை கட்டணம் ரூ.10,000

12. உடற்கூராய்வு செய்த மருத்துவர்களின் கூலி ரூ.50,000

13. சுஜீத் உடலை அடக்கம் செய்ய வாங்கிய சவப் பெட்டியின் விலை 10,000 ரூபாய்.

14. சுஜீத் மீது போட வாங்கப்பட்ட மலர் மாலைகளின் மதிப்பு 20,000 ரூபாய்

15. சுஜீத் உடலை புதைப்பதற்கான குழி தோண்ட செலவான தொகை 10,000 ரூபாய்.

ஆக மொத்த சாராசரியாக அதிகப்படியான செலவு தொகை ரூபாய். 5,51,03,300  ( 5 கோடியே 51 லட்சத்தி 3 ஆயிரத்து 300ரூபாய்). 

இது குறித்து பேரிடர்  மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு  அவர் இது வெறும் வதந்தி. தவறான வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து விளக்கமளித்த திருச்சி ஆட்சியர், “ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ரூ.5 லட்சம் தான் செலவானது சுஜித் மீட்புப் பணிக்காக ரூ.10 கோடி செலவானதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை. மீட்புப்பணிக்காக செலவிட்ட தொகை குறித்து பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் “ என தெரிவித்தார்.