×

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை இன்று முதல் அமல்!

சுங்கச்சாவடிகளில் கட்டாய ஃபாஸ்ட் டேக் வசதியை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. சுங்கச்சாவடிகளில் கட்டாய ஃபாஸ்ட் டேக் வசதியை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. சுங்கச்சாவடிகளில் தானியங்கி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பாஸ்ட் டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வாகன ஓட்டிகள் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணத்தை செலுத்த முடியும். இதனால் வாகனங்கள் நிற்கும் நேரம் குறையும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி இனி சுங்கக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி
 

சுங்கச்சாவடிகளில் கட்டாய ஃபாஸ்ட் டேக் வசதியை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. 

சுங்கச்சாவடிகளில் கட்டாய ஃபாஸ்ட் டேக் வசதியை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. 

சுங்கச்சாவடிகளில் தானியங்கி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பாஸ்ட் டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வாகன ஓட்டிகள் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணத்தை செலுத்த முடியும். இதனால் வாகனங்கள் நிற்கும் நேரம் குறையும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி இனி சுங்கக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி செல்லும் வாகனங்களுக்கு ஒரு வழியும், மற்ற அனைத்து வழிகளும் பாஸ்ட் டேக் பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த இருந்த பாஸ்ட் டேக் சேவை டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் அந்த கால அவகாசம் முடிவடையும் நிலையில், வாகனங்களில் #FASTAG ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜன.15 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. FASTAG பெறுவதில் தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு அதற்கான அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. FASTAG இல்லாத வாகனங்களில் சுங்கச்சாவடியின் ஒரு பாதையில் பணமாக கட்டணத்தை செலுத்தி செல்லலாம் ஃபாஸ்டேக் பாதையில் செல்வோர் பிறவகையில் கட்டணம் செலுத்தினால் இரட்டிப்பு தொகை வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.