×

சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நெருக்கடி: ஃபெரா வழக்குக்காக வீடியோ கான்ஃபரன்ஸில் ஆஜர்!?

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு காணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு காணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோர் ஜெயா தொலைக்காட்சிக்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியதில் அன்னிய செலாவணி மோசடியி்ல் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அமலாக்கத் துறை கடந்த 1996 ஆம் ஆண்டு இருவர்
 

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு காணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு  சென்னை உயர்நீதிமன்றம்  அனுமதியளித்துள்ளது. 

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு காணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு  சென்னை உயர்நீதிமன்றம்  அனுமதியளித்துள்ளது. 

வி.கே.சசிகலா மற்றும் அவரது  உறவினர் பாஸ்கரன் ஆகியோர் ஜெயா தொலைக்காட்சிக்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியதில் அன்னிய செலாவணி மோசடியி்ல் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அமலாக்கத் துறை கடந்த  1996 ஆம் ஆண்டு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது, அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டவர்களிடம் கேள்விகளைக் கேட்டு பதிலைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அதனால் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை மே 13-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்திற்கு எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா தரப்பில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் மருத்துவ காரணங்களுக்காக சசிகலா காணொளி காட்சி மூலம் நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ், காணொளி காட்சி மூலம் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அனுமதியளித்ததுடன், பதில்கள் அடங்கிய கோப்பை பெங்களூரு சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் காணொளி காட்சியின் போது, அதிகாரி முன்னிலையில் அவரது கையெழுத்தைப் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.