×

சிறார்களின் ஆபாசப் படங்களை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம் தான் : ஏ.டி.ஜி.பி. ரவி

சிறார்களின் ஆபாச படங்களைப் பதிவேற்றம் செய்யும் நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே உள்ளது. ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் தகவல் கொடுத்தது. அதன் படி, ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களின் லிஸ்டை காவல்துறை தயார் செய்தது. அதன் பின்னர் ஆபாசப் படம் பார்ப்பது தொடர்பாகத் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது
 

சிறார்களின் ஆபாச படங்களைப் பதிவேற்றம் செய்யும் நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே உள்ளது.

ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் தகவல் கொடுத்தது. அதன் படி, ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களின் லிஸ்டை காவல்துறை தயார் செய்தது. அதன் பின்னர் ஆபாசப் படம் பார்ப்பது தொடர்பாகத் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். 

இதற்கெல்லாம் காவல் துறை கைது செய்யுமா என்று மக்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டது ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்பவர்களைப் பீதி அடையச் செய்தது. இது மட்டுமில்லாமல் ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே வந்தனர். இதனையடுத்து மீண்டும் குடியாத்தம் தரணம் பேட்டையில் வசித்து வந்த நியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு சிறார்களின் ஆபாச படங்களைப் பதிவேற்றம் செய்யும் நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் இது குறித்துப் பேசிய ஏ.டி.ஜி.பி. ரவி, குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மட்டுமின்றி, செல்போனில் வைத்திருப்பவர்களும் குற்றம் செய்பவர்கள் தான். அதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.