×

சித்தி சசிகலாவின் வேண்டுகோளை நிறைவேற்றிய டி.டி வி.தினகரன்!கண்கலங்கிய அ.ம.மு.க தொண்டர்கள்!?

சசிகலா கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான ம. நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது. தஞ்சாவூர்: சசிகலா கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான ம. நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது. அதிமுக ஜெயலலிதா கைவசம் வந்த நிலையில், சசிகலாவுடன் சேர்ந்து அ.தி.மு.க தொடர்பான அனைத்து வேலைகளையும் சசிகலாவின் கணவரும் ‘புதிய பார்வை’ இதழில்’ ஆசிரியருமான நடராசன் கவனித்துவந்தார். 1991-ல் போயஸ் கார்டனிலிருந்து அவர் வெளியேறும்வரை, அதிமுகவின் மிக முக்கியமான அங்கமாக அவர் இருந்தார். ஆனாலும் சசிகலாவுக்கு
 

சசிகலா கணவரும்  புதிய பார்வை ஆசிரியருமான ம. நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது. 

தஞ்சாவூர்: சசிகலா கணவரும்  புதிய பார்வை ஆசிரியருமான ம. நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது. 

அதிமுக ஜெயலலிதா கைவசம் வந்த நிலையில், சசிகலாவுடன் சேர்ந்து அ.தி.மு.க தொடர்பான அனைத்து வேலைகளையும் சசிகலாவின் கணவரும் ‘புதிய பார்வை’ இதழில்’ ஆசிரியருமான  நடராசன் கவனித்துவந்தார். 1991-ல் போயஸ் கார்டனிலிருந்து அவர் வெளியேறும்வரை, அதிமுகவின் மிக முக்கியமான அங்கமாக அவர் இருந்தார். ஆனாலும் சசிகலாவுக்கு உறுதுணையாக தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் நடராசன் ஈடுபட்டு வந்தார். 

உடல்நல குறைவால் உயிரிழந்த நடராசன்

இதையடுத்து சசிகலாவின் கணவர் நடராசன், கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடராசன் மறைவின் போது  சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையிலிருந்தது பரோலில் வந்தது குறிப்பிடத்தக்கது.

ம.நடராசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

இந்நிலையில்  ம.நடராசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று தஞ்சாவூரில்  நடைபெற்றது. இதில் டி.டி.வி.தினகரன், கி.வீரமணி, கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில்,  ‘நடராசன் வாழும் நினைவுகள்’ என்கிற பெயரில் குறுந்தகடு வெளியிடப்பட்டது.

கண்கலங்கிய தினகரன் 

 

அப்போது  நிகழ்ச்சியில் பேசிய டிடிவி தினகரன், ‘எவ்வளவோ வேலைகளுக்கு மத்தியில் என் சித்தப்பாவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருக்கிறேன். உனக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் நீ இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று என் நடராசரின் மனைவியும், அமமுகவின் பொது செயலாளருமான சசிகலா என்னிடம் கூறினார். அதனால் தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன்’ என்று எதிர்பாராதவிதமாகக் கண் கலங்கினார்.இதை கண்ட அமமுக தொண்டர்களும் கண் கலங்கினர். இதனால் அந்த நிகழ்ச்சியில் ஒரு சில நிமிடங்கள் அமைதி நிலவியது.

கி.வீரமணி புகழாரம்:

இதையடுத்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசும் போது, ‘கணவனின் முதலாமாண்டு நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று அவரது மனைவி சசிகலா சோகத்தில் உள்ளார்.நடராசன் பலருக்கும் உதவியாக இருந்துள்ளார். பதவிக்காகக் கட்சி மாறும் பலரது மத்தியில்,  கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல்  உறுதியாக இருந்தவர் நடராசன், அவரது மறைவால் வாடும் சசிகலா என் ஆறுதலைக் கூறி கொள்கிறேன்’ என்றார்.