×

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வந்த நபருக்கு கொரோனா அறிகுறி!

இதனால் அவர் காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். காரைக்குடி பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். 47 வயதாகும் இவர் கடந்த 15 ஆண்டுகளாக சிங்கபூரில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 16 ஆம் தேதி சந்திரன் சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து இருமல், சளி , காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அவர் காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்த
 

இதனால் அவர் காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

காரைக்குடி பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். 47 வயதாகும் இவர் கடந்த 15 ஆண்டுகளாக சிங்கபூரில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த  16 ஆம் தேதி சந்திரன் சிங்கப்பூரிலிருந்து  இந்தியா வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து இருமல், சளி , காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அவர் காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

ஆனால்  அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குச்  செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்த அவர் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் பரிசோதனை செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து மதுரை ராஜாஜி அரசு  மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஹேமந்த் குமார் பேசும் போது, ‘சந்திரனுக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு அதற்கான தகவல்கள் உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.  அவருக்கு தொடர் இருமல் சளி பாதிப்பு இருக்கும் காரணத்தால் தான் அவர்  கொரோனா வார்டில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்’ என்றார்.