×

சாலையில் செத்துக் கிடந்த ஆண் யானை.. வனத்துறையினர் தீவிர விசாரணை !

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பல காட்டு யானைகள் இருக்கின்றன. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பல காட்டு யானைகள் இருக்கின்றன. இவை அடிக்கடி உணவு தேடிக் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தியும், பயிர்களை நாசம் செய்தும் வந்தன. இவை அனைத்திற்கும் காரணம் வன விலங்குகளுக்கு போதிய உணவு கிடைக்காததும், காடுகள் ஆகும். ஆனால், சமீப காலமாகக் காட்டு யானைகள் உயிரிழப்பது அதிகமாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கூட 15 வயது
 

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பல காட்டு யானைகள் இருக்கின்றன.

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பல காட்டு யானைகள் இருக்கின்றன. இவை அடிக்கடி உணவு தேடிக் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தியும், பயிர்களை நாசம் செய்தும் வந்தன. இவை அனைத்திற்கும் காரணம் வன விலங்குகளுக்கு போதிய உணவு கிடைக்காததும், காடுகள் ஆகும். ஆனால், சமீப காலமாகக் காட்டு யானைகள் உயிரிழப்பது அதிகமாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கூட  15 வயது ஆண் யானை கடம்பூர் மலைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் கிடந்தது. 

இந்நிலையில், பவானி சாகரிலிருந்து தெங்குமரஹாடா செல்லும் சாலையில் ஊசிப்பள்ளம் என்ற இடத்தில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் கீழே விழுந்து உயிரிழந்துள்ளது. அந்த யானை உடல்நலக்குறைவால் தான் உயிரிழந்ததா.. அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.