×

சாமிக்கு காணிக்கையாக மெக சைஸ் செருப்பு!   தமிழகத்தின் விநோத கிராமம்!

தமிழகத்தின் பல கிராமங்களில் இன்றும் பாரதிராஜாவின் கம்பீர குரலில் வருவதைப் போல மண் மனம் கமழ ஈரமனசுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் விநோத பழக்க வழக்கங்கள் பல சமயங்களில் நமக்கு புதிராக தோன்றினாலும் அவர்களின் நம்பிக்கையும், வாழ்க்கை முறையும் அவர்கள் மீது மரியாதையை கூடவே செய்கிறது. கரூர் அருகே தான்தோன்றி மலை கல்யாண வெங்கட ரமண சாமி புகழ் வாய்ந்தவர். பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள். தமிழகத்தின் பல கிராமங்களில் இன்றும்
 
தமிழகத்தின் பல கிராமங்களில் இன்றும் பாரதிராஜாவின் கம்பீர குரலில் வருவதைப் போல மண் மனம் கமழ ஈரமனசுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் விநோத பழக்க வழக்கங்கள் பல சமயங்களில் நமக்கு புதிராக தோன்றினாலும் அவர்களின் நம்பிக்கையும், வாழ்க்கை முறையும் அவர்கள் மீது மரியாதையை கூடவே செய்கிறது. கரூர் அருகே தான்தோன்றி மலை கல்யாண வெங்கட ரமண சாமி புகழ் வாய்ந்தவர். பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள்.

இவருக்கு திண்டுக்கல் மாவட்டம் கருங்கல்லை அடுத்த சின்னதம்பி பாளையத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளிகள் வருடாவருடம் ஒன்று சேர்ந்து, செம்மாளி எனப்படும் விசேஷமான செருப்பை தயார் செய்து  காணிக்கையாக செலுத்துவது வழக்கம். சில காரணங்களால் கடந்த சில வருடங்களாக செம்மாளி செருப்பை அவர்கள் சாமிக்கு காணிக்கையாக செலுத்தவில்லை. இந்நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும் நாகராஜ் என்பவரின் கனவில் சாமி தோன்றி,  ஒத்த செருப்பு வேணும் என்று கேட்டதாகவும் அதன் அளவையும் சாமியே கூறியதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். 
நாகராஜ் கனவில் கண்டதை கூறியதையடுத்து, இது நாள் வரையில் தாங்கள் செய்யாமல் கைவிட்ட ஒத்த செருப்பு செம்மாளி சாங்கியத்தை மீண்டும் தொடர்வது என்று அந்த் மக்கள் முடிவு செய்தனர். கனவில் சாமி சொன்னப்படியே மெகா சைஸில், 70 ஆம் நம்பர் அளவில் பெரிய அளவிலான ஒத்த கால் செருப்பை தோலினால் செய்து, கண்கவரும் கலை அலங்கார வேலைப்பாடுகளுடன் ஒன்று சேர்ந்து அவர்கள் உருவாக்கினர். அதன் பின்னர் தாங்கள் உருவாக்கிய கலை வேலைப்பாடுகளுடனான அந்த ஒத்தை செருப்பை சின்னதம்பி பாளையத்தில் இருந்து தலையில் சுமந்தபடியே கரூர் நோக்கி அனைவரும் பாதயாத்திரை புறப்பட்டனர். சாமிக்கு செருப்பு செய்து கொடுப்பது என்று முடிவாகி விட்டது அப்புறம் என்ன ஜோடியா செய்து வைக்க வேண்டியது தானே என்று கேட்டதற்கு சாமியின் ஒரு கால் மட்டுமே தரையில் படுவதால் ஒத்த செருப்பு மட்டும் தயார் செய்து கொண்டு போவதாகத் தெரிவித்தனர்.