×

சாத்தான்குளம் வழக்கு: மத்திய தடய அறிவியல் துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்யும்

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து லாக்அப்பில் வைத்து கொடூரமாக தாக்கினர். இதனால் இருவரும் உயிரிழந்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்துவந்த நிலையில் அதன்பின்னர் சிபிஐ போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்தனர். இந்நிலையில்
 

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து லாக்அப்பில் வைத்து கொடூரமாக தாக்கினர். இதனால் இருவரும் உயிரிழந்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்துவந்த நிலையில் அதன்பின்னர் சிபிஐ போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்தனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான தடயங்களை மத்திய தடய அறிவியல் துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்யும் என சிபிஐ தெரிவித்துள்ளது. தற்போது மத்திய தடய அறிவியல் துறை நிபுணர்கள் குழு சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான தடயங்களை ஆய்வு செய்துவருவதாகவும் வரும் அக்டோபர் முதல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை ஆய்வு செய்வர் என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.