×

சர்கார் பட போஸ்டரை பொதுமக்கள் கிழித்தனர்: முதல்வர் பழனிசாமி

சர்கார் பட பேனரை அதிமுக-வினர் மட்டுமல்ல பொதுமக்களும் கிழித்தனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் சென்னை: சர்கார் பட பேனரை அதிமுக-வினர் மட்டுமல்ல பொதுமக்களும் கிழித்தனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி, நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சர்கார். இத் திரைப்படத்தில், வில்லி கதாபாத்திரத்துக்கு சூட்டப்பட்டிருந்த கோமளவல்லி என்ற பெயர், அரசு அளித்த இலவசப் பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் பல்வேறு இடங்களை போராட்டத்தில்
 

சர்கார் பட பேனரை அதிமுக-வினர் மட்டுமல்ல பொதுமக்களும் கிழித்தனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

சென்னை: சர்கார் பட பேனரை அதிமுக-வினர் மட்டுமல்ல பொதுமக்களும் கிழித்தனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி, நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சர்கார். இத் திரைப்படத்தில், வில்லி கதாபாத்திரத்துக்கு சூட்டப்பட்டிருந்த கோமளவல்லி என்ற பெயர்,  அரசு அளித்த இலவசப் பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் பல்வேறு இடங்களை போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி, சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கை முற்றுகையிட்ட அதிமுகவினர், விஜய் பேனர்களை கிழித்தும், கட்அவுட்களை உடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், படக்குழு மற்றும் அரசுக்கு இடையே சமரசம் ஏற்பட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகள் மறு தணிக்கையில் நீக்கப்பட்டு திரையரங்குகளில் படம் மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சர்கார் பட பேனரை அதிமுக-வினர் மட்டுமல்ல பொதுமக்களும் கிழித்தனர். சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது. மேலும் மேலும் பெரிதுபடுத்த வேண்டாம். கோடி கோடியாக செலவு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி அந்த பணம் வந்தது? ரூ.100 டிக்கெட்டை ரூ.1000-க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து கருத்து தெரிவித்த முதல்வர், தமிழகத்திற்கு ஆந்திர அரசு வழங்க வேண்டிய நீர் குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் திமுக கேட்கவில்லை. திமுகவினருக்கு மக்களை பற்றி கவலையில்லை, அவர்களுக்கு தேவை அதிகாரம் மட்டுமே. சந்திரபாபு நாயுடு அல்ல அவர், காங்கிரஸ், பாஜக-வுடன் மாறி மாறி கூட்டணி வைக்கும் சந்தர்ப்பவாத நாயுடு என்றார்.

தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். தமிழகத்துக்கு நன்மை கிடைக்க மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.