×

சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை… கன்னியாகுமரியில் பரபரப்பு!

சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை இளைஞர்கள் இரண்டு பேர் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக – கேரள எல்லையின் களியக்காவிளை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வில்சன் நேற்று வழக்கம் போல பணியிலிருந்த நிலையில், அவரை இரண்டு
 

சோதனைச் சாவடியில்   சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். 

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை  இளைஞர்கள் இரண்டு பேர் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக – கேரள எல்லையின் களியக்காவிளை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில்   சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில்  வில்சன் நேற்று வழக்கம் போல பணியிலிருந்த நிலையில், அவரை இரண்டு இளைஞர்கள்  துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரணை  நடத்தி வருகின்றனர்.  துப்பாக்கி குண்டுகள் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்திருப்பது தெரியவந்தது. 

 இதை தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர்கள் இருவர் முகத்தை துணியால் மறைத்தபடி இந்த குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பது  தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு அம்மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.