×

சதானந்த சுவாமிகள் மடத்தில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை…பரபரப்பு குற்றச்சாட்டு!

மடத்தை ஆனந்தன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு 6 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் 9 மாணவர்கள் அருகிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். சென்னை தாம்பரம் அருகே நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட சதானந்தபுரத்தில் சதானந்த சுவாமிகள் மடம் ஒன்று பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மங்கையர்கரசி என்பவருக்குச் சொந்தமான இந்த மடத்தை ஆனந்தன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு 6 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் 9 மாணவர்கள் அருகிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில்,
 

மடத்தை ஆனந்தன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு 6 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் 9 மாணவர்கள் அருகிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அருகே நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட சதானந்தபுரத்தில்  சதானந்த சுவாமிகள் மடம்  ஒன்று பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.  மங்கையர்கரசி என்பவருக்குச் சொந்தமான இந்த மடத்தை ஆனந்தன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு 6 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் 9 மாணவர்கள் அருகிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நிர்வாகி ஆனந்தன் தங்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக மாணவர்கள் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்  வெளியானது. இதுகுறித்து   வழக்கறிஞர் சசிகுமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த நிர்வாகி ஆனந்தன் மாணவர்களின் பெற்றோருடன் சேர்ந்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சசிகுமாருக்கு எதிராக புகார் அளித்தார். அதில் சசிகுமார்  தங்கள் மடத்தில் சில சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்ததால் நாங்கள்  கண்டித்தோம்.  அதற்கு பழிவாங்கும் நோக்கில்  9 மாணவர்களையும் அழைத்து சென்று  இவ்வாறு பேசவைத்துள்ளார்’ என்று புகாரில் கூறியுள்ளார். 

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பாதிக்கப்பட்டது  சிறுவர்கள் என்பதால் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறினர். இதை தொடர்ந்து சிறுவர்கள் 9 பேர் சசிகுமாரிடம் இருந்து மீட்கப்பட்டு  செங்கல்பட்டு சிறார் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.