×

சசிகலாவின் ஸ்லீப்பர் செல் எடப்பாடி..? பாஜக சந்தேகம்..!

சசிகலா பக்கம் எப்போது போவார் என்பது கணிக்க முடியாது எனக் கருதுகிறது பாஜக. முக்கியமாக சசிகலாவால் முதல்வர் பதவிக்கு வந்ததால் அந்தப்பாசம் எடப்பாடிக்கு இருக்கும் எனக் கருதுகிறது. உள்ளாட்சி தேர்தலில் பிரசாரத்தை தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ் முன்னெடுக்கட்டும். நீங்கள் ஆட்சியில் கவனம் செலுத்தினால் போதும்.. கட்சியை ஓ.பிஎஸிடம் விட்டுவிடுங்கள் என வலியுறுத்த ஆரம்பித்து விட்டது பாஜக தலைமை. எடப்பாடிக்கு நோஸ்கட் கொடுக்கவே டெல்லியில் நடந்த கூட்டத்தில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. காரணம் எடப்பாடி
 

சசிகலா பக்கம் எப்போது போவார் என்பது கணிக்க முடியாது எனக் கருதுகிறது பாஜக. முக்கியமாக சசிகலாவால் முதல்வர் பதவிக்கு வந்ததால் அந்தப்பாசம் எடப்பாடிக்கு இருக்கும் எனக் கருதுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் பிரசாரத்தை தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ் முன்னெடுக்கட்டும். நீங்கள் ஆட்சியில் கவனம் செலுத்தினால் போதும்.. கட்சியை ஓ.பிஎஸிடம் விட்டுவிடுங்கள் என வலியுறுத்த ஆரம்பித்து விட்டது பாஜக தலைமை. எடப்பாடிக்கு நோஸ்கட் கொடுக்கவே டெல்லியில் நடந்த கூட்டத்தில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. 

காரணம் எடப்பாடி மீது பாஜகவுக்கு இருக்கும் சந்தேகம்.  சில நாட்களுக்கு முன்பு டி.டி.வி வலது கரமான தங்க தமிழ்செல்வன் கூறும்போது, ’’இன்னமும் சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சசிகலாவின் போட்டோவை தங்கள் பாக்கெட்டில் வைத்து சுற்றியபடியேதான் இருக்கிறார்கள் என்றார். சசிகலா வந்தால் அதிமுக முக்கிய தலைகள் கண்டிப்பாக அந்தப்பக்கம் சாயும் என்ற நிலை இன்னும் நீடிக்கிறது.

 இதைதான் டி.டி.வி.தினகரனும் ஸ்லீப்பர் செல் என்று சொல்லி வருகிறார். தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி திடீரென சசிகலா பக்கம் போனாலும் ஆச்சர்ய படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அவர் தலைக்கு மேல் டெல்லி பல கத்திகளை தொங்கிக் கொண்டு இருக்கிறது. எனினும் அவர் சசிகலா பக்கம் எப்போது போவார் என்பது கணிக்க முடியாது எனக் கருதுகிறது பாஜக. முக்கியமாக சசிகலாவால் முதல்வர் பதவிக்கு வந்ததால் அந்தப்பாசம் எடப்பாடிக்கு இருக்கும் எனக் கருதுகிறது. 

அதிலும், எடப்பாடி பழனிசாமியின் மனைவி சசிகலா குடும்பத்துடன் நெருக்கமாக இருப்பதும், இளவரசி மகன் விவேக் ஜெயராமனுடன் எடப்பாடி மகன் மிதுன் நட்புடன் இருப்பதும் பாஜக மேலிடம் ஸ்மெல் செய்து விட்டது. இதுவும் எடப்பாடி மீது பாஜக சந்தேகம் கொள்ள முக்கியக் காரணம்.