×

சசிகலா கட்சியில் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை: வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

சசிகலா கட்சியில் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார் சென்னை: சசிகலா கட்சியில் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய
 

சசிகலா கட்சியில் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்

சென்னை: சசிகலா கட்சியில் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில்  உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை. எனவே அவர் கட்சியில் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலையும், உட்கட்சிப் பதவிகளுக்கான தேர்தலையும் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் நடத்தக் கோரி சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனு அளித்துள்ளார். சசிகலா சார்பில் தாங்கள் தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள மனுவே பொதுச்செயலாளர் என்ற முறையில் தான் கொடுத்துள்ளோம். எனவே, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

முன்னதாக, அதிமுக அணிகள் இணைப்புக்கு பிறகு, அக்கட்சியின் சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதனை எதிர்த்து அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.